சென்னை: தன்னை கேவலமாக விமர்சிக்கும் பத்திரிகையாளர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இன்று கே.ந.கூ வின் தலைவர் வைகோ, நமது நிருபரின் கனவில் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:
நிருபர்: உங்களுடைய கொள்கை என்ன?
வைகோ: கொள்கையா…. அதெல்லாம் தெரியாதுங்க….. விஜயகாந்த் முதலமைச்சரா ஆகணுங்க…..சுதீஷ் சென்ட்ரல் மினிஸ்டராவங்கோ….. அன்னை பிரேமலதா துணை முதலவராவனுங்கோ…. அவ்ளோதாங்க……தெரியும்
நிருபர்: சரி இலங்கை பிரச்சினையில் உங்கள் நிலை என்ன?
வைகோ: இப்ப ஏங்க…. இலங்கைக்கு போகனும்… அது பாட்டுக்கு இருந்து போகட்டுமே…
நிருபர்: மது ஒழிப்பில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?
வைகோ: கேப்டன் எவ்வளவு தண்ணியடிச்சாலும் ஸ்டெடியா நிக்கற மாதிரி பார்த்துகுவோங்க…
நிருபர்: மாநில சுயாட்சி….மத்தியில் கூட்டாட்சி… பற்றி உங்கள் கருத்து என்ன?
வைகோ: அமெரிக்காவுல இன்னா நடந்தா நமக்கென்னங்க….இங்க பத்தி கேளுங்க
நிருபர்: சீமானின் மண்ணின் மைந்தர் கொள்கை பற்றி உங்க கருத்தென்ன?
வைகோ: இன்னாது..? மைனா குருவியெல்லாம் இப்ப இல்லீங்களே?
நிருபர்: பொருளாதர முன்னேற்றத்தில் விவசாயத்துக்கு முன்னிடமா….இல்லை தொழிற்சாலைகளுக்கு முன்னிடமா?
வைகோ: நாலு பேக்டரி கட்டினாதாங்க…. எலெக்ஷனுக்கு செலவு செஞ்ச காசுக்கு பதிலா குறஞ்சது நூறு மடங்காகவது எடுக்க முடியும்
நிருபர்: உங்களுடைய மொழி கொள்கையை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
வைகோ: அதுல எல்லாம் கொள்கை வேணாங்க…. அது பாட்டுக்கு இருந்துட்டு போகட்டும்…. அதுல போயி கொள்கையை ஏத்தி…??
நிருபர்: முடிவா…. உங்களுடைய அரசியல் நோக்கம்தான் என்ன?
வைகோ: எம்ஜியார் சினிமால நடிச்சாருங்க…. முதலமைச்சர் ஆயிட்டாரு…. கருணாநிதி சினிமாவுக்கு கதை வசனம் எழுதினாருங்க…. முதலமைச்சர் ஆயிட்டாரு…. ஜெயலலிதா சினமாவுல நடிச்சாங்க… முதலமைச்சரா ஆயிட்டாங்க…. அதே மாதிரி நம்ப கேப்டனும் சினிமாவுல நடிச்சாருங்க…. முதலமைச்சர் ஆகனுங்க்கோ…. கூடவே நாங்களும் கொஞ்சம் காசு பாப்பங்கோ…..அதாங்க…
There are no comments yet
Or use one of these social networks