சென்னை: ஆம் ஆத்மி கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து மதிமுக பொதுச் செய லாளர் வைகோ சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது ஆதரவை பெற முடியாததால் மனம் உடைந்த வைகோ அமெரிக்க செல்ல இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து கூறப்படுவதாவது: தமிழ் நாட்டில் ஆளே இல்லாத ஆம் ஆத்மி கட்சியையும் விட்டு வைக்காமல் கூட்டணிக்கு அழைத்த வைகோவிற்கு ‘குல்லா’ போட்ட ஆம் ஆத்மி, யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனைப் போல் வைகோ மேலும் பல கட்சிகளைத் தேடித் பிடித்து ஆதரவு கேட்க முடிவு செய்துள்ளார். இதன் முதல் கட்டமாக குடியரசு கட்சியை கூட்டணியில் சேர்க்கலாம் என விஸ்கிகாந்தும், அன்னை பிரேமலதாவும் வைகோவுக்கு ஆலோசனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அமெரிக்காவின் குடியரசு கட்சியின் வேட்பாளர் தொழிலதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க துணை முதல்வர் வைகோ அமேரிக்கா பயணம் மேற்கொள்வார் என தெரிகிறது.
There are no comments yet
Or use one of these social networks