காக்கி நாடா எனக்கு, பாவாட நாடா உனக்கு – சினிமா பாணியில் நடந்த கேப்டன் – வைகோ தொகுதி பங்கீடு

421

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில், கே.ந.கூ வில், தே.மு.தி.க., 124 தொகுதிகளிலும், ம.ந.கூ., 110 தொகுதிகளிலும் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டு உள்ளது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமையில், ம.ந.கூ தலைவர்கள் கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு விஸ்கிகாந்துடன் தொகுதி பங்கீடு பேச்சை நடத்தியுள்ளனர். மக்கள் நலக்கூட்டணி போட்டியிட விரும்பும், 110 தொகுதிகளின் பட்டியலை விஸ்கிகாந்திடம், அதன் தலைவர்கள் கொடுத்தனர். அந்த பட்டியலை பார்த்த விஜயகாந்த், அதை மச்சான் சுதீஷிடம் ஒப்படைத்தார். அதைப் பெற்ற சுதீஷ் தன் அறைக்கு சென்று தனக்குத் தானே பேசினார். ஐந்து நிமிடங்களுக்கு பின், மீண்டும் விஸ்கிகாந்த் அறைக்கு வந்த அவர், விஸ்கிகாந்தின் காதில் கிசு கிசுத்தார்.

அதன் பிறகு விஸ்கிகாந்த், வைகோவிடம் காக்கி நாடா எனக்கு, பாவாட நாடா உனக்கு பாணியில் வடமாவட்டங்கள் எனக்கு, தென் மாவட்டங்கள் உனக்கு என்று தெரிவித்துள்ளார். அதை ஏற்க மறுத்த வைகோ அங்கிருந்து வேக வேகமாக வெளியேறி நேராக, அண்ணாநகரில் உள்ள வீட்டிற்கு சென்றார் என மதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

There are no comments yet