சென்னை: மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ இன்று நிருபர்களுக்கு அளித்த பரபரப்புப் பேட்டியில் கூறியதாவது: கடந்த வாரம் நான் முதல்வர் ஜெயலலிதா, தான் அடிக்கடி சென்று தங்குகின்ற சிறுதாவூர் பங்களாவிற்கு ரூ.1000 மற்றும் ரூ. 500 அடங்கிய நோட்டுக் கட்டுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு கண்ட்டெய்னரில் கொண்டு சென்று சிறுதாவூர் பங்களா வளாகத்திற்குள்ளாக மறைக்கப்பட்டதாக தெரிவித்தேன்.
ஆனல் எனக்கு சற்று முன் கிடைத்த நம்பகமான தகவலின் படி முதல்வர் ஜெயலலிதா சட்ட விரோதமாக லஞ்ச லாவண்யத்தில் பெற்ற ஊழல் பணம் மற்றும் சொத்துக்களை சந்திரனில் பதுக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த உலகின் எந்த மூலையில் பணம், சொத்துக்களை வைத்திருந்தால் நான் கண்டு பிடித்து விடுவேன் என பயந்து ஜெயலலிதா இந்த காரியத்தை செய்திருக்கிறார். சந்திரனில் ஜெயலலிதாவுக்கு பெரிய பங்களா இருப்பதாகவும், அங்குள்ள மூடி மறைக்கப்பட்ட நிலவறைகளில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று அம்புலி மாமா இதழில் படித்தேன். இதற்கான ஆதரங்களை என்னிடம் நமது தேசிய தலைவர் பிரபாகரன் நேரில் நாளை கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்.
தேர்தல் கமிசன் நிலாவிற்கு சென்று தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் என நான் உங்கள் மூலம் கோரிக்கை விடுக்கிறேன். அதன்மூலம் தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மீண்டும் வருவதற்கும், சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்கும் வழி வகுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று வைகோ ஆவேசமாக கூறினார் .
There are no comments yet
Or use one of these social networks