சென்னை: இன்று திமுக-காங்கிரஸ் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிடுவதென்று முடிவுகள் வெளியானது. இனி எந்தக் கட்சிக்கும் திமுக கூட்டணியில் இடமில்லை என்றும் செய்திகள் வெளியானது. இதற்கு பிறகு அடுத்த சில மணிநேரங்களிலேயே அதிமுக 227 இடங்களில் போட்டி என்றும்,தோழமைக் கட்சிகளுக்கு 7 இடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டு,வேட்பாளர் பட்டியல் படுவேகமாக வெளியானது. ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக கூட்டணியில் இடம்பிடிக்கும் என்று அரசியல் ஆருடம் கூறப்பட்டு வந்த நிலையில், அதிமுக தலைமை வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டுவிட்டது. திமுகவும் வாசனை சேர்க்காது என்று உறுதியான செய்திகள் வெளியாகியுள்ளதால் அவரின் அடுத்த ஒரே வாய்ப்பாக தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி போவார் எனத் தெரிகிறது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தோடு வாசன் தரப்பில் பேசி வருவதாகவும், தொகுதிகள் உடன்பாடு எட்டப்படும் நிலையில் இருப்பதாகவும், மிக விரைவில் முடிவு எடுக்கப்பட்டு தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியில் வாசன் இடம் பிடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த வாசன் கட்சியினர் கேப்டன் கிட்ட அடி வாங்க தெம்பு இல்ல, டெபாசிட்டும் கிடைக்கிறது கஷ்டம். பேசாம காங்கிரசுக்கே திரும்பி போயிடலாம், அங்க 41 சீட்டுக்கே ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று வாசனுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது. வாசனும் கட்சியை கலைத்து விட்டு இன்னுமொருமுறை காங்கிரசோடு ஐக்கியமாவார் எனத் தெரிகிறது.
There are no comments yet
Or use one of these social networks