சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன் தே.மு.தி.க.வின் வடசென்னை, குமரி மேற்கு மாவட்ட செயலர்கள் தி.மு.க.விற்கு தாவினர். இதனை ”தி.மு.க.வின் இழுப்பு படலம்” ”ஆபரேசன் ஸ்டாலின்” என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன் தே.மு.தி.க. உள்ளிட்ட மாற்று கட்சியினர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசுகையில் தே.மு.தி.க.வை நாங்கள் இழுக்கவில்லை. அது தானாக நடக்கிறது. விரைவில் தே.மு.தி.க. கரையும். இன்னும் என்னவென்னவெல்லாம் நடக்கும் என நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்றார். பேசிய மூன்று நாட்களில் இன்று தே.மு.தி.க.வில் புதிய அணி உருவாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து ராஜ்ய சபா சீட் கொடுத்து மச்சான் சுதீஷையும் திமுகவிற்கு இழுக்க முயற்சி நடப்பதாக அறிவாலய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்க்கு ஆபரேசன் ‘தானாய் கரையும்’ என்றும் ஸ்டாலின் பெயரிட்டுள்ளார். இதன் முதல் முயற்சியாக மாப்பிள்ளை சபரீசன், மச்சான் சுதிஷிடம் இன்டர்காம் மூலம் பேசியுள்ளதாக தெரிகிறது. தேதிமுகவில் இருந்தால் நீ எந்த ஜென்மதிலேயும் மந்திரி ஆக முடியாது. ஆனா இங்க வந்தா மூன்றே மாதத்தில் முச்சந்தியில் நிறுத்தி சட்டைய கிழிக்க வைப்போம் என வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது. சுதீசும் அக்கா,மாமாவிடம் ஆலோசனை செய்து சொல்கிறேன் என பதில் அளித்தததாக நம்ப முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks