என்னை தேமுதிக வின் கொ.ப.செ., யாக நியமித்த அன்னை பிரேமலதாவுக்கு என் உயிர் உள்ளவரை நன்றி – வைகோ அறிக்கை

3793

சென்னை: கே ந கூ தலைவர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இன்று மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தேமுதிகவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விளக்கம் அளித்தேன்.

அக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும், சில மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சித் தலைமை சட்டமன்றத் தேர்தல் குறித்து மார்ச் 23 ஆம் தேதியன்று எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமையைக் கடுமையாக விமர்சித்து நேற்றைய தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறிய கருத்துகளுக்குப் பதில் சொல்லும் விதத்தில் சில விளக்கங்கள் அளித்தேன்.viajyakanth

இந்த விளக்கங்களை கேட்ட, அன்னை பிரேமலதா என்னை தொலைபேசியில் அழைத்து ‘வைகோ பிச்சு உதறி விட்டீர்கள். கட்சியின் முதலாளியான நான் கூட இப்படி பேசியிருக்க மாட்டேன், உங்களையே தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கிறேன் என்று கூறினார். எனது 50-ஆண்டு கால அரசியல் வாழ்கையில் இதைவிட என்ன பேறு இருக்க முடியும். அந்த அன்னைக்கு நான் வாழ் நாள் முழுதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன், அன்னையின் ஆணையை சிரமேற்று கேப்டனின் கொள்கைகளை பரப்புவேன் என்று இத்தருணத்தில் கூறிக் கொள்கிறேன், என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

There are no comments yet