தேமுதிக உடைப்பு வெளிநாட்டு சதி, அண்ணன் கலைஞர் பத்தரை மாற்றுத் தங்கம் – கருணாநிதிக்கு வைகோ புகழாரம்

446

சென்னை: தேமுதிக பிளவுபட்டது தொடர்பான சர்ச்சை குறித்து கருத்து தெரிவிப்பதற்காக சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் திமுக தலைவர் கருணாநிதியை கலைஞர் பத்தரை மாற்றுத் தங்கம் என கே ந கூ தலைவர் வைகோ பாராட்டி பேசினார். “திமுகவிற்கும், தேதிமுக பிளவிற்கும் சம்பந்தம் இல்லை, வெளிநாட்டு சதியால் தேமுதிக பிளவு பட்டுள்ளது. கேப்டன் அடிக்கடி சிங்கப்பூர் செல்லும் போதே நான் நின்னைத்தேன், இம்மாதிரி ஏதாவது நடக்கும் என்று. இந்த மாதிரியான கீழ்த்தரமான வேலையை கருணாநிதியும் செய்யலாம். கட்சிகளை உடைப்பது திமுக தலைவர் கருணாநிதிக்கு கைவந்த கலை. அது அவரது ரத்தத்தில் ஊறியது. ஆனால், அவரது எண்ணம் ஒரு போதும் ஈடேறாது, அண்ணன் கலைஞர் பத்தரை மாற்றுத் தங்கம்” என்று வைகோ கூறினார்.

செய்தியாளர்களு சந்தித்த அடுத்த அரை மணி நேரத்தில் வைகோ வெளிட்ட அறிக்கை vaikoவருமாறு: இன்றைய செய்தியார் சந்திப்பில், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு கலைஞரை பாராட்டி விட்டேன், அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களைக் குறித்தோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ, மறைமுகமாக இப்படிச் சொல்ல வேண்டும் என்று இம்மி அளவும் என் மனதில் எண்ணம் இல்லை என்பதை, நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்.கருணாநிதி குடும்பம் ஒரு கழிசடை என்பது எல்லோருக்கும் தெரியும். கருணாநிதி நல்லவர் என்று கூறியதை என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கின்றேன் இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

There are no comments yet