பாண்டவர்களை தேடி வந்த பாஞ்சாலியே வருக – வாசனுக்கு அடைக்கலம் கொடுத்து வைகோ உணர்ச்சிப் பேட்டி

561

சென்னை: விரைவில் கூட்டணி முடிவை அறிவிப்பேன் என கூறி வந்த த.மா.கா., தலைவர் வாசன், தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணியில் அடைக்கலமானார் .

தமிழக தேர்தல் களத்தில் கூட்டணிக் கட்சி யாரும் இல்லாமல் அனாதையாகக் ஒவ்வொரு கட்சியின் கதவுகளைத் தட்டிகொண்டிருந்தார் வாசமில்லா வாசன் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த வைகோ, முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று பிற்பகல் தமாகா அலுவலகத்துக்கு சென்று ஜி.கே.வாசனை சந்தித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கோயம்பேட்டுக்கு சென்று விஸ்கிகாந்துடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் வாசனை மனப்பூரவமாக தங்களுடன் சேர்த்துக் கொள்வதாக கே ந கூ அறிவித்தது.vijayakanth-vasan-makkalnalakootani

இது குறித்து வைகோ உணர்ச்சி வசப்படாமல் கூறியதாவது: நாங்கள் ‘பஞ்ச’ பாண்டவர்கள, பாஞ்சாலி இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். எங்கள் ஏக்கத்தை தீர்க்க இன்று எங்களுடம் வாசன் சேர்ந்துள்ளார். இது வரை அவரும் அவரது கட்சினரும், தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும், ஈழ மக்களுக்கும் ஆற்றிய தொண்டு அளவில்லாதது. அதனால்தான் மதிமுகவிற்கு இணையாக அவருக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு சிலர் எங்களை ஜெ வி கூ , அதாவது ஜெயாவால் விரட்டப் பட்டவர்கள் கூட்டணி என்று கூறுகின்றனர். அது தவறு எங்களுக்கு பக்க பலமாக இருந்து எங்களை ஆட்டி வைப்பவரே மாண்பு மிகு முதல்வர்தான், அவர் எப்படி எங்களை விரட்ட முடியும் என்று கூறினார்

There are no comments yet