வைகோ, கேப்டன், பிரேமலதா நடத்திய திமுக தேர்தல் அறிக்கை டிஸ்கசன் – ரகசியப் பேச்சு அம்பலம்

615

திமுக வின் தேர்தல் அறிக்கை குறித்து வைகோ, கேப்டன் ,பிரேமலதா , திருமா, ராம்கி, முத்தரசு, வாசன் உள்ளிட்ட கே ந கூ தலைவர்கள் ரகசிய டிஸ்கசன் நடத்தியது உங்கள் நியூஸ் புலனாய்வு நிருபரின் பாம்புக் காதுக்கு எட்டியது. அந்த உரையாடல் இங்கே:

கேப்டன்: வைகோ அண்ணே ஏன் வழக்கத்துக்கு மாறா ரொம்ப சந்தோசமா இருக்கீங்க, . நம்ம மாநாட்டின் கூட்டத்தை பார்த்தா…

வைகோ: அதெல்லாம் ஒன்னுமில்லை என் உடன்பிறவா சகோதரனே. என் உயிர் மூச்சு மற்றும் என்னாருயிர் தந்தை மற்றும் தலைவர் கலைஞர் அவர்கள் தனது கட்சி தேர்தல் அறிக்கையில் அடிமைகள் திமுக அரசால் போடப்பட்ட அவதூறு வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.அதனால்தான் என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நானும் அந்த அம்மா போட்ட அவதூறு வழக்குகளுக்கெல்லாம் நடையாய் நடந்துக்கொண்டிருக்கிறேன், முடிந்தபாடில்லை. நல்ல வேலை பத்திரிக்கைகாரனுங்க எல்லாம் முட்டாளுங்க- வைகோ நடை பயணம் மேற்கொள்கிறார் என்று எழுதிட்டங்க….கேப்டன் ஜி இதை தயவுசெய்து த=இத யாருக்கும் லீக் அவுட் செய்திடாதிங்க அப்புறம் அவங்க என்னை ‘வீக் அவுட்’ செய்து “வாக் அவுட்” செய்துவிடுவார்கள்…..

கேப்டன் ஏதோ பேச நினைக்கிறார். ஆனால், வார்த்தை வரவில்லை…

பிரேமலதா: ஆமாம் வைகோ அண்ணே!!! அந்த அம்மா எங்கள் மீதும் நிறைய அவதூறு வழக்குகள் போட்டு எங்களை துரத்தி அடிக்கிறது. vaiko vijayakanthஅதனால் நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன்.

கேப்டன்: என்னம்மா அந்த முடிவு..

பிரேமலதா: நீங்க கொஞ்சம் பேசாம இருக்கீங்களா, சும்மா தொண தொணத்துக்கிட்டு…

கேப்டன்: ஆமா நீ என்றைக்குத்தான் என்ன பேச விட்ட…

பிரேமலதா: நீங்க அப்படியே பேசிட்டாலும்…..

கேப்டன்: ம்ம்ம்….சரி, சரி அந்த முடிவு…

பிரேமலதா: வைகோ அண்ணே, நம்ம கே ந கூ வை கலைச்சுட்டு , கலைஞர் கூடவே சேர்ந்துடலாம் ……..

கேப்டன்: பிரேமா டார்லிங் நீங்க சொன்னா கரேக்டாதான் இருக்கும். நீங்க கிழிச்ச கோட்டினை என்னைக்குத்தான் நான் தாண்டிருக்கேன்…..

வைகோ: என் அன்பு சகோதரி பிரேமா நான் நினைப்பதை நீ சாதித்துக்காட்டிவிடுகிறாய். நாம் எல்லோருமே கருணாநிதிக்கு பலம் சேர்த்து நம்மையெல்லாம் இத்தனை நாள் பிடித்து உலுக்கிய அவதூறு வழக்கு என்ற பிசாசினை ஒட ஒட விரட்டுவோம்.

பிரேமலதா: அண்ணே இதை சகோதரர்கள் திருமா , ராம்கி, முத்தரசன், வாசன் அவர்களிடம் ஆலோசிக்கலாமா…..

வைகோ: அட போம்மா அவர்கள் நம் மாநாடு முடிவதற்கு முன்பே ஜூட் விட்டுவிட்டார்கள்… திமுக வின் தேர்தல் அறிக்கை பார்த்தவுடன் வயிறு கலக்குது என்று……

There are no comments yet