சென்னை: தீவுத்திடலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா பேசியதாவது: ஒவ்வொரு நாளும், தமிழக மக்கள் நலன் பேண, அல்லும் பகலும் யோசித்து, திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றதும் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்துவேன். உங்கள் வாழ்க்கைத்தரம் மேலும் உயரும் வகையில் நான் மீண்டும் தமிழக முதல்வர் ஆனால் ரேசன் கடைகளில் படிப்படியாக டாஸ்மாக் சரக்கு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் ஆட்சியில் குடி மகன்கள் யாவரும் எந்தக் குறையும் இல்லாமல் இருக்க அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். எனவே இந்த புதிய முயற்சி அனைவரையும் கவரும் என நம்புகிறேன் என்று கூறினார்.
இது குறித்து ஒரு குடி மகன் கூறும்போது: இதுபோன்ற அறிவிப்பை தேர்தல் நேரத்தில் அதிமுக கண்டிப்பாக அறிவிக்கும் என்பது எல்லோரும் எதிர்பார்த்ததே. இப்போதும் அறிவிக்காவிட்டால் கட்டாயம் ஓட்டு கிடைக்காது என்று தான் கடைசிக்கட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று ஜெயாவை குறை கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks