மாமண்டூர்: கே ந கூ வின் சிறப்பு மாநாடு செங்கல்பட்டை அடுத்த மாமண்டூரில் தேமுதிக தலைவர் விஸ்கிகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தேமுதிக தலைவர் விஸ்கிகாந்த் பேசியதாவது:
திமுகவுக்கு அதிமுக எதிரி, அதிமுகவுக்கு திமுக எதிரி, எனக்கு நான் தான் எதிரி. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு அழகிரி தான் எதிரி. டாஸ்மாக் கடைகளை படிப்படி யாக மூடுவேன் என்று ஜெயலலிதா சொல்கிறார். இத்தனை நாள் வாங்கிக் குடித்த நானும் எனது கட்சியினரும் சரக்குக்கு எங்கே போவது, யாரைக் கேட்பது, இதற்க்கெல்லாம் ஜெயா பதில் சொல்வாரா.
சென்னை மெரினா பீச்சில் எப்போதும் கூட்ட நெரிசல் உள்ளது. சமீபத்தில் கூட ஜெயலலிதாவின் பொதுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இருவர் இறந்தனர். இதன் காரணமாக நான் ஆட்சி அமைத்தால் மெரினா பீச்சை மதுரைக்கு மாற்ற ஏற்பாடு செய்வேன். மூன்று கட்டப் பணியாக நடக்கும் இந்தத் திட்டத்திற்கு நம்ம வைகோவின் உறவினர்களுக்கு கான்ட்ராக்ட் கொடுக்கப்படும். மெரினா பீச் இருந்த இடத்தில், பிளாட் போட்டு வீடில்லாதவர்களுக்கு குடிசை கட்டித் தரப்படும், அதற்க்காக சுதீஷுக்கு கான்ட்ராக்ட் விடப்படும்.
என் கட்டுப்பாட்டில் தான் தேமுதிக கட்சி இருக்கிறது, பிரேமலதா கட்டுப்பாட்டில் நான் இருக்கிறேன். எங்கள் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று விஜயகாந்த் பேசினார்.
There are no comments yet
Or use one of these social networks