நான் யார் – வாக்காளர்களுக்கு நினைவூட்டிய கலைஞரின் சிக்கலான விடுகதை

575

சென்னை: வரும் தமிழக சட்டமற்ற தேர்தலை ஒட்டி சூறாவளி பிரச்சாரம் செல்ல தயாராக இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி, மக்களுக்கும், வாக்காளர்களுக்கும், புதுமையான முறையில் நான் யார் என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். விடுகதையாய் இருக்கும் அந்த அறிக்கை கீழ தரப்பட்டுள்ளது:

1. எனது மகளின் தாயார் என்றாலும் எனது மனைவி என்று சொல்ல மாட்டேன்.
2. மத்திய அரசாங்கத்திற்கு கண்டனம் ஆனால் ஆதரவு வாபசில்லை.
3. தண்டவாளத்தில் தலை வைப்பேன் ஆனால் ரயில் வராது .
4. பிரபாகரனை ஆதரிக்கவில்லை , ஆனால் இறந்த புலிகளுக்கு இரங்கற்பா வாசிப்பேன்.
5. சாமியார்களை கண்டிப்பேன் ஆனால் சாய்பாபாவிடம் குங்குமம், விபூதி வாங்கிக் கொள்வேன்.
6. வெறும் 10 கோடியில் ஆரம்பித்த கலைஞர் டிவிக்கு பல வட இந்திய நிறுவனங்களிடமிருந்து (ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் லாபம் அடைந்த) 214 கோடி வாங்கி இருப்பேன், ஆனால் இதை CBI கண்டு பிடித்து கேட்டால் கடன் வாங்கினேன் என்பேன் இரண்டே நாளில் திருப்பியும் கொடுத்து விடுவேன்.
7. கண்ணகிக்கு சிலை எழுப்புவேன் , ஆனால் தெருவிற்கு ஒரு மனைவி, துணைவி, இணைவி, அணைவி, குழவி ……என வைத்து கொள்வேன்.
10. டெசோ ஈழத்திற்கு போராடும் , ஆனால் தனி ஈழ தீர்மானங்கள் இருக்காது.
11. இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை சுடுவதை வன்மையாக கண்டிப்பேன் ஆனால் இந்த துபாக்கி சூடு சம்பவங்களுக்கு காரணமான கட்ச தீவை இந்திரா இலங்கைக்கு கொடுக்கும் போது முதலில் எதிர்த்து பின்னர் சர்க்காரிய கமிசன் ஊழல் வழக்குகள் தூசு தட்டபடும் என சொன்ன உடன் சம்மதித்து விட்டேன்.
12. தமிழ் தமிழ் என கத்துவேன் ஆனால் தெலுங்கு வருட பிறப்பிற்கு தமிழ் நாட்டில் அரசு விடுமுறையை அறிவித்து விடுவேன்.

11. ஊழலுக்கு நான் நெருப்பு என்பேன் ஆனால் என் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரின் சொத்துகளையும் கூட்டினால் உலக முதல் பணக்காரன் நான். karunanidhi_family
12. தமிழ் மக்கள் இந்தி படிக்க கூடாது என்பேன் ஆனால் பேரன் தயாநிதிக்கு இந்தி நல்லா தெரியும் என கூறி மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுப்பேன்
13. அன்பழகனை கட்சியில் இரண்டாம் இடத்தில இருக்கிறார் என்பேன் ஆனால் துணை முதல்வர் பதவியை மகன் ஸ்டாலினுக்கு தான் கொடுப்பேன்.
14. தமிழ் மக்கள் கடுமையான மின் வெட்டினால் பாதிக்கப்படுவதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என்பேன் ஆனால் மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரத்தை தமிழ் நாட்டிக்கு ஒதுக்க கூடாது என கண்டிப்பாக மத்திய அரசிடம் திரை மறைவில் சொல்லி விடுவேன்.
15. வால் மார்ட் தமிழகத்தில் வந்தால் கடும் போராட்டம் நடத்துவேன் என்பேன் ஆனால் ஓட்டெடுப்பின் போது FDI க்கு ஆதரவாக ஓட்டை போட்டு விடுவேன்.
16. போர் நின்றுவிட்டது என்று பிரணாப் தான் தவறான செய்தியைக் கொடுத்தார் என்பேன் , ஆனால் அவர் ஜனாதிபதி ஆவதற்கு நான் முதல் ஆளாக முன்மொழிவேன் .
17. தமிழர்கள் டெல்லியில் உயர் பதவியில் வருவதை தான் நான் எப்போதும் விரும்புவேன் என்பேன் ஆனால் டாக்டர் அப்துல் கலாம் இரண்டாவது முறையாக குடியரசு தலைவராக வர இருந்த நிலையில் அவருக்கு ஆதரவு இல்லை என்பேன்
18. “அரசியல் சட்டத்தைக் கொளுத்துவோம்” – ன்னு வீராப்பு பேசுவேன் அதே மாதிரி கொளுத்தி கைதாகி தண்டனை கடுமையாக இருக்கும்,,,, சிறை செல்ல வேண்டி என்று தெரிந்த நிலையில் “வெறும் காகிதத்தைத்தான் கொளுத்தி” என்று காமெடி செஞ்சிட்டு வெளியே வந்து விடுவேன்.
17. BJP யை மத வாத கட்சி என்பேன் ஆனால் முஸ்லீம் லீக் உடன் கூட்டணி வைத்து கொள்வேன்.
18. ராஜபக்சேவை எதிர்ப்பேன் , ஆனால் போராட்டமில்லை . M-Karunanidhi
19. அதே வரிசையில் , இப்பொழுது டீசலுக்கு இரட்டை விலை முறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பேன் இது தொடபான அமைச்சரவை கூட்டத்தில் இரண்டை வரி விதிக்க ஆதரவு தெரிவித்து விடுவேன்.

நான் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

என்று கலைஞரின் விடுகதையில் கூறப்பட்டுள்ளது.

மிகவும் சிக்கலான, கடினமான இந்த விடுகதைக்கு பதில் தேடி தமிழக வாக்காளர்கள் எப்போதும் போல் குழம்பி உள்ளார்கள் என நமது செய்தியாளர் சிக்கல் சின்னச்சாமி தெரிவிக்கிறார்

There are no comments yet