சென்னை: ஆதரவாளர்களுக்கு, ‘சீட்’ வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, சென்னையில் நேற்று, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்தார். அப்போது, கூட்டணி விவகாரம், கட்சி நிலவரம் குறித்தும், கருணாநிதியின் சுற்றுப் பயணம் குறித்தும், ஆலோசனை நடத்தினார். தன் ஆதரவாளர்கள் ஒருவர் கூட இடம் பெறாதது வருத்தம் அளிப்பதா கவும், வேட்பாளர்கள் பட்டியல் தனக்கு திருப்தி அளிக்க வில்லை என்றும், மனக்குமுறலை பதிவு செய்துள்ளார்.
அதற்கு பதிலளித்த கருணாநிதி, ‘வேட்பாளர்கள் அனைவரும் தி.மு.க.,வினர் என்பதால், அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.தென் மாவட்டங் களில் வெற்றி பாதிக்கக் கூடாது’, நமது கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், நான் அரசியலை விட்டு விலகி விடுவேன், ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதவியும், உனக்கு துணை முதல்வர் பதவியும் அறிவிக்கிறேன். இப்போதைக்கு பிரச்சினை பண்ணாதே என்று கூறியதாக கோபாலபுர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks