புலிகள் யாரென்றே எனக்குத் தெரியாது, சிறுத்தைகள் மட்டுமே இப்போது நெருக்கம் – வன விலங்கு காவலர் வைகோ வாக்குமூலம்

1215

சென்னை: புலிகளுக்கு இப்போது சீசன் இல்லை என்பதால், நான் அவைகள் பற்றிய பேச்சை எடுப்பதில்லை. அதோடு எனது புலி காண்ட்ராக்ட் முடிந்து விட்டது என்று வைகோ கூறினார்.

இன்று செய்தியாளர்களிடம் ஆவேசமாக வைகோ பேசியதாவது: நான் 1989-ல் இலங்கைக்குப் பயணம் செய்து 23 நாட்கள் வன்னிக் காட்டில் புலிகளுடன் தங்கி இருந்தேன். அந்த கதைக்கு பில்டப் கொடுத்து  சில வருடங்கள் புலிகள் பெயரை வைத்து நான் நடத்திய வியாபாரத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததது. நிறைய லாபம் கிடைத்தது. சமீப காலங்களாக புலி வியாபாரத்தில் லாபம் குறைந்து விட்டது. என் கேப்டன் கூட புலி வியாபாராம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

இப்போதைக்கு டிரண்ட் சிறுத்தைதான். அதுவும் நல்ல ‘சாதி’ கட்சிIndian-tiger-relaxing-in-forest சிறுத்தையாக இருந்தால் கொஞ்சம் ஓட்டுக் கிடைக்கும் என்று அனைவரும் சொன்னார்கள், எனவே இப்போதைக்கு எனக்கு சிறுத்தைகளை மட்டுமே பிடிக்கும். ஆனால் தேர்தலுக்குப் பிறகு இவை எல்லாத்தயையும் விட்டு விட்டு ஆதி தொழில் செய்யலாம் என இருக்கிறேன் என்று கூறினார்.

There are no comments yet