புது டெல்லி: பத்ம விபூஷன்விருது வாங்கிய பின்பு டில்லியில் ரஜினி நிருபர்களுக்கு அளித்த பேட்டி பின் வருமாறு. மயிலாப்பூரில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பழம்பெரும் கபாலி தியேட்டரை புதுப்பிக்க 10 கோடி கொடுத்துள்ளேன். எனது கபாலி படம் திரைக்கு வரும் அன்று புதுப்பொலிவுடனும் நவீன தொழில்நுட்பங்களுடனும் தியேட்டர் செயல்படும். கபாலி படத்தையும் அங்கேயே ரிலீஸ் செய்யாலாம் என்று ஒரு ஐடியா உள்ளது. எனது ரசிகர்கள் துணையுடன் இதை சிறப்பான விழாவாக கொண்டாட உள்ளேன்.
விழாவின் சிறப்பு அம்சமாக முதல் நாள் முதல் காட்சி டிக்கட் வாங்கும் முதல் பத்து பேருக்கு 50 லிட்டர் பால் குடம் பரிசாக வழங்கப்படும், அதை அங்குள்ள கட் அவுட்டில் ஊற்றி ரசிகர்கள் தங்கள் வயிற்றில் பால் வார்த்துக்கொள்ளலாம். எனது நீண்ட கால நண்பரான கமல் ஹாசனை திறப்பு நாள் அன்று நடைபெறும் கணபதி ஹோமத்தில் பிள்ளையார் வேடத்தில்வந்து துதிக்கையில் குத்து விளக்கு ஏற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளேன். இதுவரை கமல் ஹாசன் இந்த வேடத்தில் தோன்றாததால்அவரது இந்த வேடம் அனைவருக்கும் புதுமையாக இருக்கும் என நினைக்கிறேன் என்று ரஜினி கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks