நட்சத்திர கிரிக்கெட்டில் நஷ்டம் – நடிக, நடிகைகள் டிவி சீரியல்களில் நடித்து சங்கத்தை காப்பாற்ற விஷால் கோரிக்கை

6590

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. நடிகர் சங்க கட்டிடம் கட்ட நடிகர்களிடம் பணமா இல்லை, நாங்கள் எதற்காக கொடுக்க வேண்டும் என மக்கள் விமர்சித்து இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியை புறக்கணித்தனர். திரையுலக நட்சத்திரங்கள் starcricket6003அனைவரும் ஒன்று கூடி விளையாடும் போதிலும் அதை காண மக்கள் கூட்டத்தை ஸ்டேடியத்தில் காணமுடியவில்லை.

இதை தொடர்ந்து, நடிகர் விஷால் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, நட்சத்திர கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு தமிழக மக்களே பொறுப்பு. பொது மக்கள் இப்போது வேண்டுமானால் எங்களிடமிருந்து தப்பிக்கலாம், ஆனால் இந்த நஷ்டத்தை ஈடு கட்ட, நாங்கள் நடிக, நடிகைகள் அனைவரும் டிவி சீரியல்களில் நடித்து, கிரிக்கெட் பார்க்க வராத தமிழக மக்களை இம்சை செய்வோம். இதற்காக சங்க கூட்டத்தை விரைவில் கூட்டுவோம் என்று ஆவேசமாக கூறினார்.starcricket

There are no comments yet