புது டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் ராபர்ட் வதேராவின் மனைவியும், சோனியாகாந்தியின் மகளுமான பிரியங்கா, 53ஆயிரம் ரூபாய் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாக கூறியுள்ளார். நேரு பரம்பரையைச் சேர்ந்த பிரியங்கா காந்தி பலகோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரர். பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோரா மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். இந்நிலையில் , பிரியங்கா காந்தி வீட்டு வாடகை செலுத்த முடியாமல் கஷ்டப்படுவதாக செய்தி வெளியானது.
இதுதொடர்பாக, பிரியங்கா ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது: மத்தியில் காங்கிரஸ் ஆட்சி போனதில் இருந்து, ரெம்ப சிரமமாக இருக்கிறது. நானும் என் குடும்பத்தினரும் சோத்திற்கே வழியில்லாமல் கஷ்டப்படுகிறோம். இன்னும் வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம். எனது கணவர் ராபர்ட் வதோராவும், தம்பி ராகுல் காந்தியும் அன்றாடம் கூலி வேலை செய்து என்னையும், வயதான என் தாயார் சோனியாவையும் காப்பாற்றுகின்றனர். இந்த மாதிரியான இக்கட்டான நிலைமையில், இந்த பாஜக அரசு கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் எங்கள் வீட்டு வாடகையை அதிகரித்து எங்களை கொடுமைப் படுத்துகிறது. இந்த கஷ்ட நிலை நீடித்தால் இத்தாலியில் இருக்கும் எங்களது சொந்த வீட்டுக்கே போய் விடலாம் என்று இருக்கிறோம். இவ்வாறு பிரியங்கா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
There are no comments yet
Or use one of these social networks