கோவில்பட்டியில் தன்னை வெற்றி பெற வைப்பதற்காக அதிமுக வேட்பாளரை மாற்றிய ஜெயாவிற்கு வைகோ நன்றி – கேட்காமலேயே கொடுக்கும் தாய் என ஜெயாவிற்கு புகழாரம்

454

சென்னை: மதிமுக பொதுச்செயலாளரும் , கே ந கூ தலைவருமான வைகோ போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த ராமானுஜம் கணேஷ் மாற்றப்பட்டு, தற்போதையை எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த வேட்பாளர் மாற்றம் குறித்து வைகோ நேற்று கட்சி அலுவலகமான தாயகத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறேன். இது வரை எந்த தேர்தலிலும் எனக்கு அதிர்ஷ்டம் ஆதரவு அளிக்கவில்லை. கமல் பாடியது போல், நான் உப்பு விற்க போகும்போது மழை பெய்கிறது, பொரி விற்கப் போகும்போது காத்து அடிக்கிறது. எனது வரலாற்றைத் தெரிந்த என் தாய் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அம்மா அவர்கள், எனக்காக, நான் வெற்றி பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த ராமானுஜம் கணேஷ் அவர்களை மாற்றி விட்டு தற்போதையை எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூவை வேட்பாளராக அறிவித்துள்ளார்.jaya vaiko

பிள்ளைகளின் தேவைகளை, கேட்காமலேயே கொடுக்கும் தாய், நான் கேட்காமலேயே எனக்காக வேட்பாளரை மாற்றி உள்ளார். கோவில்பட்டி கடலை மிட்டாய் போல இனிப்பான செய்தி இது. இந்த இனிப்பை எனக்கு வழங்கிய தாய்க்கு நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நன்றி செலுத்த வார்த்தையில்லை. அந்த அன்புச் சகோதரி தமிழக முதல்வராக நீடிக்க என் ஆதரவு என்றும் உண்டு என்று வைகோ கூறினார்.

There are no comments yet