தோல்வியில் முடிந்த நடிகர் சூர்யாவின் நட்சத்திர கிரிக்கெட் வெற்றி – கேப்டன் தோனியை சந்தித்து சான்ஸ் கேட்டார்

1659

சென்னை:  தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக நடிகர்கள் பங்கேற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. பல குழப்பங்களிடையே முடிந்த இந்த ஜோக்கர்ஸ் நிகழ்ச்சியை தமிழ் மக்கள் அறவே புறக்கணித்து அரிதாரம் பூசும் நடிகர்கள் முகத்தில் கரியைப் பூசியது அனைவரும் அறிந்ததே.

மாற்றான் சினிமாவில் தோற்றான்: இந்நிலையில், நடிகர் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ்அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியதாலும், சினிமாவில் தனக்கு அடுத்தடுத்து அடி விழுந்து வாய்ப்புக்கள் குறைவதாலும், நடிகர் சூர்யா நடிப்புக்கு முழுக்கு போட இருப்பதாக நம்பத்தகாத தகவல்கள் கூறுகின்றன. மும்பையில் கேப்டன் தோனியை சந்தித்து ஏதாவது ஒரு ஐ பி எல் டீமில் சான்ஸ் கிடைக்குமா எனக் கேட்டதாக தோனியின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்து நிருபர்களை சந்தித்த சூர்யா ‘நான் ஓங்கி அடிச்சா ஒன்ற டன் ரன்னுடா, பாஞ்சு புடிச்சா பத்தயிரம் கேட்சுடா” என்று பத்திரிகையாளர் சந்திதிப்பில் கத்தியதும் கூட்டத்தில் ரசிகர் ஒருவர் “சிங்கம் ஸ்டேடியம் எறங்கீருச்சி” எsurya rajiniன்று உற்சாகப்படுத்த “சிங்கத்த அங்க பாத்துருப்பே இங்க பாத்துருப்பே கிரிக்கட்ல விக்கட் எடுத்து பாத்திருக்கியா பாக்குறியா” என்று கழுத்து நரம்பு புடைக்க சீறினார்.

சூர்யாவின் இந்த அதிரடி முடிவினால் விஷால் கோஷ்டியினர் அரண்டு போய் இருப்பதாக கோடம்பாக்கம் செய்திகள் கூறுகின்றன

There are no comments yet