தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை, “ஹார்லிக்ஸ் திமுக” – தனிக் கட்சி தொடங்கினார் அழகிரி

390

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி, மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தபோது அவர் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளுக்கு மிகவும் காட்டமாக பதிலளித்தார். மேலும் உங்களுக்கும் திமுகவுக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு “எவன் சொன்னானோ அவனை போய் கேளுங்கள்” என்று கடிந்து கொண்டார்.

அவர் மேலும் கூறுகையில், வரும் சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் எனது ஆதரவில்லை, இது என் ஆதரவாளர்களுக்கும் பொருந்தும், விரைவில் என் ஆதரவாளர்களை கலந்து ஆலோசித்து ‘ஹார்லிக்ஸ் திமுக’ என்ற பெயரில் தனிக் கட்சி ஒன்றை தொடங்குவேன். ஹார்லிக்ஸ் இந்தியாவில் தொன்horlicsறு தொட்டு அனைவராலும் அருந்தப்படும் சத்து பானம். அது போல் என்னுடைய ஹார்லிக்ஸ் திமுக, வறுமையில் இருக்கும் தமிழக மக்களுக்கு ஊக்கம் கொடுக்கம் இயக்கமாக இருக்கும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணவத்தினால் இயங்கும் டாஸ்மாக்கில் மதுவைக் குடித்து வயிறை புண்ணாக்கிக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு எங்களது ‘ஹார்லிக்ஸ் திமுக’ தான் அருமருந்து.

எனது ‘ஹார்லிக்ஸ் திமுக’, ஸ்டாலின் குடும்பத்தின் கைப்பிடியில் இருக்கும் திமுகவிற்கு மாற்றாக இருக்கும். எனது தந்தை முத்தமிழ் வித்தகர் கலைஞர் எனது கட்சிக்கு அரசியல் ஆலோசகராக இருப்பார். அவருக்கு இப்போதைய திமுகவில் மதிப்பு, மரியாதை எல்லாம் போய்விட்டது. எனது கட்சிக்கு ஹார்லிக்ஸ் பாட்டிலை சின்னமாக ஒதுக்க தேர்தல் கமிசனுக்கு கோரிக்கை வைப்போம் என்று அழகிரி கூறினார்.

There are no comments yet