சென்னை: சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. சமூக ஊடகங்களில் பெரிதும் விமர்சிக்கப்படும் இந்த பேச்சுக்கு நேற்று ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார்.
அதில் கூறியிருப்பதாவது: நான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இரட்டை அர்த்தத்தில் விமர்சித்தது, அவர் மீது உள்ள வெறுப்பினால் அல்ல. தமிழ் நாட்டின் முத்தமிழ் அறிஞர் என் அப்பா கலைஞர் கருணாநிதி எப்போதும் தமிழோடு விளையாடி, எத்தனையோ பேரை இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக விமர்சித்துள்ளார். ஒரு முறை சட்டசபையில் கூட சத்தியவாணி முத்துவை பார்த்து “பாவாடை நாடாவை அவிழ்த்தால் தெரியும்” என்று கூறியிருக்கிறார்.
அவரது மகனான நான், அவரில் கால் பங்காவது பேச வேண்டாமா, இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக, விரசமாக பேசாவிட்டால் எங்கள் குடும்ப கவுரவம் என்ன ஆவது. நான் கருணாநிதியின் மகன் என உலகுக்கு உணர்த்தவே ஜெயாவை இரட்டை அர்த்தத்தில் விமர்சித்தேன், கருணாநிதி பாணியில் அவரது மகன் நான், அதில் எனக்கு பெருமிதம்தான் என்று ஸ்டாலின் விளக்கம் கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks