பச்சை தலைப்பாகையை தேர்தலுக்காக அணியவில்லை, அம்மாவின் ராசிப்படியே பச்சை நிறம் அணிய முடிவு செய்துள்ளேன் – தூத்துக்குடியில் வைகோ அறிவிப்பு

788

தூத்துக்குடி: பச்சை தலைப்பாகையை தேர்தலுக்காக அணியவில்லை. அம்மாவின் ஆணைப்படியே அணிந்துள்ளேன். இனிமேல் இதனை கழற்றப் போவதில்லை’ என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் வைகோ பச்சை தலைப்பாகை அணிந்து காட்சியளித்தார். இதைத் தொடர்ந்து, பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும், இவருக்கு வரும் வெற்றி வாய்ப்பை கருப்பு துண்டு தொடர்ந்து தடுத்து வருகிறது. எனவே, கருப்பு துண்டு அணிவதை தவிர்த்து, வெள்ளை அல்லது பச்சை நிறத் துண்டு அணிந்தால் தான் இவரால் வெற்றி பெற முடியும். எனவே வைகோ கேரளா ஜோதிடரின் ஆலோசனைப்படியே பச்சை தலைப்பாகை அணிகிறார் என்றும், இந்த தேர்தலில் எப்படியாவது டெபாசிட் வாங்கி விட எதையும் செய்ய தயாராக உள்ளார், அதானால் தான் மாந்த்ரீக ஜோதிடர்களில் பேச்சை கேட்க ஆரம்பித்துவிட்டார் என செய்திகள் உலா வந்தன.jaya vaiko

இந்நிலையில் இன்று விளாத்திகுளம் புதூரில் வைகோ இதற்கு ஒரு புது விளக்கம் கொடுத்தார், அப்போது கூறியதாவது: இந்த பச்சை தலைப்பாகையை தேர்தலுக்காக அணியவில்லை. என் அன்புச் சகோதரி முதல்வர் ஜெயலலிதாவின் ராசிப்படி பச்சை வெற்றியைத் தரும், எனவே அவரின் வழியில் நானும் பச்சை அணிந்து பார்க்கலாம் என்றுதான் பச்சை தலைப்பாகை அணிய ஆரம்பித்துள்ளேன். இனிமேல் இதனை கழற்றப் போவதில்லை. ஒரு வேலை அம்மாவின் ராசிப்படி நான் இந்த தேர்தலில் டெபாசிட் வாங்கி விட்டால், அதற்குப் பிறகு பச்சை வேட்டியும் அணியலாம் என்று முடிவு செய்துள்ளேன் என்று வைகோ கூறினார்.

There are no comments yet