சென்னை: தமிழகம் முழுவதும் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக 100 டிகிரிக்கு மேல் வெயிலும், அனல் காற்றும் அடிப்பதால் வீடுகளில் இருந்து வெளியே வரவே மக்கள் தயங்குகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் அனல் பறக்கும் பேச்சினாலும், வெயிலின் கொடுமையினாலும் முதல்வரின் பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் உயிரிழப்புகளும், பலர் மயங்கி விழுந்து உடல்நிலை பாதிக்கும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதுவரை ஐந்து தொண்டர்கள் இறந்துள்ளனர் மற்றும் கணிசமானோர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து நடக்கும் ஜெயாவின் பிரச்சாரக் கொலைகள் தவிர்க்க அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் சூரிய பகவானுக்கு யாகம் செய்து வெயிலை குறைக்க முடிவு செய்திருப்பதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த யாகத்திற்காக, இமய மலையில் இருந்து ஆயிரம் பசுக்களும், நூறு புரோகிதர்களும் சென்னை நோக்கி கால்நாடையாக பயணம் செய்து வருவதாக அம்மாவின் அடிமை ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் தெரிவித்தார்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா அவர்களும், தனது அனல் பேச்சின் வீச்சையும் கொஞ்சம் குறைத்து, கருணாநிதியை திட்டி மட்டும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் மட்டும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது.
There are no comments yet
Or use one of these social networks