தமிழ் நாட்டின் அடுத்த ‘அம்மா’ நான் தான் – அதிமுகவில் சேர்ந்த கையோடு புதிய புரட்சித் தலைவி நமீதா பரபரப்புப் பேட்டி

1480

சென்னை: சனிக்கிழமை மாலை திருச்சியில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இதில் நடிகை நமீதாவும் கலந்துகொண்டு, முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவின் பிரச்சார பீரங்கியாக விளங்கப் போகும், தமிழ் நாட்டின் தங்கத் தாரகை, கனவுக் கன்னி நமீதா உங்கள் நியூஸ் நிருபருக்கு அளித்த பேட்டி :

நிருபர்: திடீரென அதிமுகவில் சேரக் காரணம்:

நமீதா: எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்து வாழவைக்கிறது தமிழ்நாடு. சென்னை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. நம்மை வாழவைக்கிற ஊருக்கு, நானும் ஏதாவது செய்யணும் இல்லையா? அதான் அரசியல்ல குதிச்சிட்டேன்.

நிருபர்: குறிப்பாக ஏன் அதிமுக?

நமீதா: உங்களுக்கு தெரியுமா, முதல்வர் ஜெயலலிதாவும், தனது மன்றங்கள் மூலமாக அதிமுகவில் நுழைந்தார், பின்னர் ஆட்சியைப் பிடித்தார். அவர் வழியில் நான். இப்போ மன்றங்கள் மூலமா, என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்துட்டு இருக்கேன். இன்னும் கொஞ்ச நாளில் அதிமுகவையும், ஆட்சியையும் பிடிப்பேன்.nami31

நிருபர்: சினிமா என்ன ஆனது, சினிமாவுக்கு முழுக்கு போடுவீர்களா?

நமீதா: இந்த ஆண்டு 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளேன். ஒன்று பெரிய படம், மற்றொன்று சண்டை படம். வயசு ஆக ஆக, மார் கட்டும் போச்சு, மார்கெட்டும் போச்சு. முன்பு மாதிரி குத்தாட்டங்களும் ஆட முடியவில்லை, மூட்டு வலி, முடக்க வாதம் வந்து விடுகிறது. வயசாச்சு இல்லே…

நிருபர்: கடைசியாக நீங்கள் தமிழக மக்களுக்கு சொல்ல விரும்புவது:

நமீதா: சிறந்த தலைவியாகத் திகழும் அம்மா தலைமையில் பணியாற்றி, தமிழ் நாட்டின் அடுத்த ‘அம்மா’வாக உருவாகி தமிழக இளைஞர்களுக்கும், முதியவர்களுக்கும் தொண்டாற்றி முதல்வர் நாற்காலியை பிடிப்பது தான்.

There are no comments yet