மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மராத்வாடா பிராந்தியத்தில் நிலவி வரும் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும், பெப்சி குளிர்பான நிறுவனத்தினரும் இணைந்து உதவி செய்ய முன்வந்துள்ளனர். இதுதொடர்பாக அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், சச்சின் டெண்டுல்கருடன்ஆலோசனை நடத்தினார்.
பிறகு, இதுகுறித்து ஃபட்னவீஸ் கூறியபோது: மும்பை தண்ணீர் பஞ்சத்தால் மக்களுக்கு குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்க்காக அரசாங்கத்தின் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் தாகம் தணிக்க பெப்சி கோலா இலவசமாக வழங்கலாம் என முடிவு செய்துள்ளோம். வழங்க கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும், பெப்சி குளிர்பான நிறுவனத்தினரும் இணைந்து இத்திட்டத்தை ஸ்பான்சர் செய்ய உள்ளனர். இந்தியாவின் நிலத்தடி நீரை கடைசி சொட்டு வரை உறிஞ்சி, அதை பாட்டிலில் அடைத்து காசு பார்க்கும் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த பட்சம் இதை செய்ய முன் வருவது பாராட்டுக் குரியது என்று கூறினார். இந்த திட்டம் கூறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறும்போது ‘பெப்சியின் விளம்பர படங்களில் நடிப்பதால் எனக்கு கோடிக் கணக்கில் வருமானம் வருகிறது. பணம் என்றாலே ‘தில் மாங்கே மோர்’ என்று கூறினார்.
பிறகு, இதுகுறித்து சுட்டுரையில் ஃபட்னவீஸ் வெளியிட்ட பதிவில், “மராத்வாடா பிராந்தியத்தில் நிலவி வரும் தண்ணீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க பாரத ரத்னா விருது பெற்ற சச்சின் டெண்டுல்கரும், பெப்ஸி நிறுவனத்தினரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர். இதுதொடர்பாக டெண்டுல்கரைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
There are no comments yet
Or use one of these social networks