ஆட்சிக்கு வந்தால் அறிவாலயம், 2-ஜி வருமானம், மற்றும் குடும்ப சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்படும் – தேர்தல் பிரச்சாரத்தில் உணர்ச்சி வசப்பட்ட ஸ்டாலின்

1569

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் திருடர் முன்னேற்றக் கழக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது: , எனக்கு கருணாநிதி மகன் என்கிற அங்கீகாரம் போதும், வேறு எந்த பதவியும் வேண்டாம். உடல் நலன் உள்ளிட்ட எதையும் பொருட்படுத்தாமல், மக்களுக்காக உழைக்கும் தலைவரின் மகன் என்பதில் பெருமைப்படுகிறேன்.

நானும் என் குடுபத்தினரும் பரம ஏழைகள், நான் ஜெயலலிதா போல் ஹெலிகாப்டரில் வந்து உங்களிடம் பேசவில்லை. சைக்கிள், மோட்டார் பைக், நடை பயணமாக வந்து, உங்களை சந்திக்கிறேன். மக்களுக்காக நான் என கூறும் ஜெயலலிதா, அவரது கோடநாடு எஸ்டேட்டை மக்களுக்காக எழுதிக் கொடுப்பாரா, ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அறிவாலயம் மட்டுமல்ல, எங்களுடைய எல்லா சொத்துக்களையும், arivalayamமக்களுக்கே கொடுத்து விடுவோம். எனது உறவினர்கள் கலாநிதி, தயாநிதி ஆகியோரின் அனைத்து சன் டிவி மற்றும் சன் குழும சொத்துக்களையும், 2-ஜியில் வந்த சொற்ப வருமானத்தையும் அரசுடமையாக்குவோம். என் அண்ணன் அழகிரியின் சொத்துக்களை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். அவர் என் அண்ணன் அல்ல, என் பெற்றோரின் மகன். அவர் சொத்துக்களை அரசுடமையாக்குவது பற்றி அவர்தான் முடிவு செய்வார். எனவே எங்களுக்கு இன்னும் ஒரு முறை வாய்ப்புத் தாருங்கள், ஆட்சிக்கு வந்தவுடன் எங்கள் சொத்தையெல்லாம் உங்களுக்கு எழுதி வைத்து விடுவோம் என்று உணர்ச்சி வசப்பட்டு கூறினார்.

There are no comments yet