மாண்புமிகு புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்கள் ஆணைப்படி சட்டப் பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை – கடமை தவறாத வைகோ கண்ணீர் பேட்டி

1249

சென்னை: சட்டப் பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடீரென அறிவித்துள்ளார். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் வைகோ இன்று மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென அவர் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. மதிமுக சார்பில் மாற்று வேட்பாளர் விநாயக் ரமேஷ் கோவில்பட்டி தொகுதியில் மனுதாக்கல் செய்தார். ஏன் மனுதாக்கல் செய்யவில்லை என்பது குறித்து கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

நான் முதலிலேயே தேர்தலில் நிற்க வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன், அனால் முன்பே அதை சொல்லியிருந்தால் தேர்தல் பரபரப்பு, சுவாரசியம் போய்விடும் என்பதால் கடைசி வரை காத்திருந்தேன். அது மட்டுமல்லாது இன்றுதான் அன்னையின் ஆணை வந்தது. மாண்புமிகு புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்கள் ஆணைப்படி சட்டப் பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை

நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், தேசிய முற்போக்கு திராவிட கழகம், மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆகிய ஆறு கட்சிகளும் இணைந்து நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மாண்புமிகு புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்கள் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க, பசி நோக்காது, கண் துஞ்சாது, மெய் வருத்தம் பாராது நான் பாடுபடுவேன்.

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத கழகக் கண்மணிகள், எனது முடிவை ஏற்றுக்கொண்டு, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பம்பரமாகச் சுழன்று, அம்மா அவர்கள் நம்மைப் பாராட்டும் வகையில் பணியாற்றிடப் பாசத்தோடும் உரிமையோடும் வேண்டுகிறேன்” என்று வைகோ கூறியுள்ளார்.

There are no comments yet