அடுத்த கட்ட நடவடிக்கை, தேர்தல் பிரச்சார வியூகம் – வைகோ, கேப்டன் காரசார விவாதம், ஒட்டுக் கேட்ட உங்கள் நியூஸ்

653

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் தான் போட்டியிட போவதில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்த பிறகு தேமுதிக-மக்கள் நல கூட்டணி- தமாகா வெற்றிக்காக பிரசாரம் செய்யவும், கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி பயணம் செய்து கேப்டனை முதல்வராக்க வைகோ முடிவு செய்துள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், பிரச்சார வியூகம் குறித்தும் கேப்டனும், வைகோவும் நடத்திய விவாதத்தை நமது பாம்புக் காது நிருபர் வழக்கம் போல் ஒட்டுக் கேட்டு உங்களுக்காக இங்கே வழங்குகிறார்.

வைகோ: கேப்டன் ஆட்சியில் மது விலக்கு கொண்டு வரப்படும்
கேப்டன்: யார வச்சிட்டு என்ன பேச்சி பேசுறிங்க, வேற சொல்லுங்க அண்ணே .

வைகோ: குடும்ப அரசியல் முற்றிலும் இருக்காது.
கேப்டன்: என் மச்சான், என் குடும்பம், பிள்ளைங்கள் எங்க போவாங்க வேற சொல்லுங்க.

வைகோ: அனைவருக்கும் கல்வி இலவசம் ஆக்கப்படும்.
கேப்டன்: உங்கள நம்பி கூட்டணி வச்சி என் ரெண்டு எம்எல்ஏ, அப்புறம் 8 மாவட்ட செயலாளர்களை இழந்துட்டு நிக்குறேன். இப்ப ஆண்டாள் அழகர் கல்லுரியையும் மூட ப்ளான் பண்றிங்களா, என்னண்ணே இப்படி பண்றீங்க வேற சொல்லுங்க.

வைகோ: அனைவருக்கும் இலவச இன்டர்னெட் சேவை
கேப்டன்: ஏண்ணே கொஞ்சமாச்சும் கூர் இருக்கா எல்லா பயலும் அங்கதா நம்மள கழுவி ஊத்துறான் அத போய் ப்ரின்னு சொல்ற, வேற சொல்லுண்ணே

வைகோ: ஸ்ஸ், அப்பா.. கட்ச தீவை போராடி மீட்போம்
கேப்டன்: நீங்க பண்ண போராட்டம் ஏதாச்சும் வெளங்கி இருக்கா கூடன்குளம், ஸ்டெர்லைட் எல்லா வெளங்காம தா போய் இருக்கு. வேற சொல்லுங்க

வைகோ: என்னடா இது….. ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம்.
கேப்டன்: கமிசன் வாங்கிதான் கட்சியே நடத்துறோம்னு  எல்லா பயலும் சொல்லிட்டு திரியறான் வேற சொல்லுண்ணே.

வைகோ: ஜாதியை முற்றிலும் ஒழிப்போம்
கேப்டன்: திருமாவளவன் வச்சிட்டு என்ன பேசிறிங்vijayakanth_new 3.2_0க எல்லா பயலும் சிரிக்க மாட்டானா?

வைகோ: தேவை இல்லாமல் வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
கேப்டன்: கம்யூனிஸ்ட் கட்சியே உண்டியல் வசூல்லதான் ஓடுது அவிங்க பொழப்புல ஏன் மண்ண அள்ளி போடுற வேற சொல்லுண்ணே.

வைகோ: மேலவை மன்றம் மீண்டும் கொண்டு வரப்பட மாட்டாது.
கேப்டன்: வாசன் கட்சில தொண்டனை  விட தலைவர்கள் அதிகம் அவங்கள எல்லாம் எப்படி திருப்தி படுத்துறது. வேற சொல்லுங்க.

வைகோ: புகையிலை இல்லாத மாநிலம் ஆக்குவோம்
கேப்டன்: உங்க பையந்தான் புகையிலை, சிகரெட் கம்பெனி ஓ னர் அவனுக்கு வேட்டு வைக்க போறீங்களா.

வைகோ: மறந்துட்டேன் தம்பி…..நீங்களே சொல்லுங்க தம்பி, எனக்கு பட படன்னு வருது.
கேப்டன்: இந்தா பாருங்கப்பா நாங்க எல்லாரும் சேர்ந்து உங்களுக்கு நல்லது ஏதாச்சும் பண்ணுவோம் கெளம்புங்க அறிக்க அம்புட்டுத்தான். எப்படிண்ணா  சரியா சொன்னேனா……

வைகோ: இதுக்கா என்ன இம்புட்டு கத்து கத்த விட்ட இத முதல்ல செஞ்சி இருக்கலாம்ல.

There are no comments yet