சென்னை: சமீபத்தில் அதிமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அதிமுகவில் இணைந்து தமிழர்களுக்கும், தமிழ் நாட்டிற்கும் சேவை செய்ய விரும்பியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், திமுகவில் குஷ்பு இல்லாததாலும், அதிமுகவில் நமீதா இணைந்ததாலும் சோகமாக இருக்கும் உடன்பிறப்புகளை குஷிப்படுத்தவும், திமுகவின் தேர்தல் அறிக்கையில் இருக்கும் கவர்ச்சி அம்சங்களை மக்களிடம் அறிமுகப்படுத்தவும், பாலிவுட்டின் கவர்ச்சி குயினாக வலம் வரும் நடிகை சன்னி லியோனை திமுகவிற்கு கொண்டுவர ஏற்பாடு நடந்து வருவதாக தெரிய வருகிறது.
சன்னி லியோன் பெயரிலேயே திமுவின் கொள்கைகளும், சின்னமும் இருப்பதாக, கலைஞர் கருணாநிதி இன்று உடன்பிறப்புக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். ‘சன்’ என்றால் ‘son’ அது என் மகன் வருங்கால முதல்வர் ஸ்டாலின். ‘சன்’ என்றால் ‘sun’ அது நம் சின்னம் உதய சூரியனை குறிக்கும். எனவே சன்னி லியோனின் பெற்றோர்களும், முதாதையர்களும் திமுகவினர், ஆகவே அவருக்கு ‘சன்’னி லியோன் என்று பெயரிட்டுள்ளனர். சன்னி லியோனுக்கு கழக கண்மணிகளும், உடன்பிறப்புக்களும், வழக்கம்போல் ஆதரவு தந்து புதிய ‘சக்தி’யுடன், எழுச்சியாக தேர்தல் வேலைகளை பார்க்க இந்த தள்ளாத வயதில் உங்களை கேட்டுக்கொள்கிறேன் என்று கலைஞர் கூறியுள்ளார்.
There are no comments yet
Or use one of these social networks