கரூரில் சிக்கிய பணம் அமைச்சர்களின் சிறு சேமிப்பு – நான் கொடுத்த பாக்கெட் மணி – ஜெயா ஒப்புதல் வாக்குமூலம்

185

மதுரை: “ஆங்கங்கே தேர்தல் கமிசனிடம் பிடிபடும் பணம் நான் அமைச்சர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் கொடுத்த பாக்கெட் மணி” என மதுரையில் நடந்த அதிமுக தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். மதுரை, தேனி, திண்டுக்கல், துாத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த 47 தொகுதிகளில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மதுரையில் ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது: கரூர் நிதி நிறுவன அதிபர் அன்புநாதன் கோடவுனில் பணத்தை சேமித்து வைத்துள்ளது பற்றி எதிர் கட்சிகள் பேசுகின்றன. அய்யம்பாளையத்தில் ஆடு மேய்த்த அன்புநாதனிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று கருணாநிதி கேட்கிறார்.

திருட்டு ரயில் ஏறி சென்னை வந்த கருணாநிதிக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று நான் என்றாவது கேட்டதுண்டா. அது மட்டுமல்ல,18jaya-(lead)big தொண்டர்களிடமும், பொது மக்களிடமும் நிதி வசூல் செய்துதான் கருணாநிதி பிழைப்பு நடத்துகிறார். அனால் நான் அப்படி அல்ல, அமைச்சர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் நான் அவ்வபோது பாக்கெட் மணி கொடுப்பதுண்டு. அந்த பாக்கெட் மணியை எனது அடிமைகள் அன்புநாதனிடம் சிறு சேமிப்பாக கொடுத்து வைத்துள்ளனர். தமிழ் நாட்டிலேயே
பிள்ளைகளின் தேவை அறிந்து, அவர்களுக்கு பாக்கெட் மணி கொடுக்கும் அம்மா நான் மட்டும்தான் என்று ஜெயலலிதா பேசினார்.

There are no comments yet