சென்னை: டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் கமலும் ஷ்ருதி ஹாசனும் நடிக்கும் படத்துக்கு சபாஷ் நாயுடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பூஜை சென்னை நடிகர் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் கமல், ஸ்ருதி, இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சபாஷ் நாயுடு என்ற இந்தப் படத்தின் டைட்டிலுக்கும் வைகோவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிலர் இந்த படத் தலைப்பு வைகோவைக் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் அவர் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிலிருந்து திடீரென விலகியதற்கு பாராட்டு தெரிவித்தும் இந்த பட டைட்டில் சபாஷ் நாயுடு என வைக்கப்பட்டுள்ளதாக கூறியிருப்பது தவறானது.
எல்லோரும், எல்லோருக்கும், ஓட்டுப் போடவேண்டும். சில சமயம் நல்லவர்களுக்கு வாக்களிக்கலாம். நல்லவர்கள் இல்லை என்றால் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். எனது வாக்கை யாராவது போட்டு விடுவார்கள். ஏற்கெனவே எனக்கு வாக்கு இல்லை என்று சொல்லி விட்டார்கள். இப்போது ஊரில் வேறு இல்லை. வாய்ப்பிருந்தால் வாக்களிப்பேன், இல்லை என்றால் சும்மா இருப்பேன். நான் ஏதாவது சொன்னால் என்னை கருத்து கந்தசாமி என்று உடனே அறிக்கை விட்டுவிடுவார்கள்.
ஜாதிகள் ஒழிய வேண்டும் என்பது தான் என் விருப்பம், அதற்காகத் தான் தேவர் மகன் போன்ற படங்களை எடுத்தேன், இப்போது சபாஷ் நாயுடு படமும் அந்த வரிசையில்
சேரும். அரசியல் என்பது பாதுகாப்புக்காக காலில் அணிந்து கொள்ளும் செருப்பு போன்றது. அதை கழற்றி அரசியல்வாதிகளை அடியுங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். அந்த வகையில் வாக்களிப்பது ரசிகர்களின் இஷ்டம் என்றார் கமல்
There are no comments yet
Or use one of these social networks