ராசாத்திக்கு 37 கோடி, எனக்கு 7 கோடிதானா… டைவர்சுக்கு தயாராகும் தயாளு அம்மாள் – கலக்கத்தில் கலைஞர்

10628

சென்னை: சட்டமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது இன்றைய அமைச்சர்களின் அதிரடி சொத்துக் குவிப்பும், முந்தய திமுக குடும்பத்தின் சொத்து வளர்ச்சியும் வெளிச்சத்திற்கு வந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி, திருவாரூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தபோது அதில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் சொத்து மதிப்பு ரூ.7 கோடியும், கருணாநிதியின் இணைவி ராசாத்தி அம்மாளின் சொத்து மதிப்பு ரூ.37 கோடியும் என வேட்புமனுவில் கருணாநிதி கூறியிருந்தார்.

இந்தக் கணக்கு கருணாநிதியின் குடும்பத்தில் புயலைக் கிளப்பி உள்ளதாக கோபாலபுர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘நேத்து வந்தவ, அவளுக்கு 37 கோடி இருக்கு, வருஷம் பூரா உங்களுக்கு வடிச்சிக் கொட்டின எனக்கு 7 கோடிதானா, நான் என் அம்மா வீட்டுக்கு போறேன், இப்பவே எனக்கு டைவர்ஸ் வேணும் ‘ என்று தயாளு அம்மாள் கலைஞரை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் தேர்தல் பிரச்சாரத்தைக் கூட கலைஞர் ஒத்தி வைத்துவிட்டு தயாளு அம்மாளை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருப்பதாக ஒரு உடன்பிறப்பு கவலையோடு தெரிவித்தார். மேலும் தயாளு அம்மாவின் மனதை மாற்றி தந்தையோடு இருக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட அழகிரி, ஸ்டாலின், மற்றும் செல்வியும் கோபாலபுரத்திற்கு விரைந்துள்ளதாக தெரிகிறது. கருணாநிதியின் இணைவி ராசாத்தி அம்மாளும், கனிமொழியை அழைத்துக் கொண்டு இன்னும் நல்ல ஆடிட்டராகப் பார்த்து சொத்துக்களை குறைத்துக் காட்ட புறப்பட்டுள்ளதாக தெரிகிறது. dhayalu karuna

There are no comments yet