சென்னை: தேர்தல் பிரச்சார மேடைகளில் சமயங்களில் சம்பந்தம் இல்லாமல் பேசி, மக்களைக் குழப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். வேட்பாளர்களை அடித்து, பத்திரிக்கையாளர்கள் மீது சீறி விழுந்து, கட்சித் தொண்டர்களை நாக்கை துருத்தி கண்டித்து என தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் கொஞ்சமும் பரபரப்பு இல்லாமல் பார்த்துக் கொள்வதில் வல்லவர் விஜயகாந்த். தற்போது, தொண்டை பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், அவதியடைந்து வருகிறார். அவரால், தொடர்ச்சியாக பேச முடிய வில்லை. பேச வந்த விஷயங்களை மறந்து விடுகிறார். மேடைக்கு கீழே இருந்து, தொண்டர்கள் குரல் கொடுத்தால், டென்ஷன் ஆகி விடுகிறார். பேச்சை நிறுத்தி விட்டு, தொண்டர்களுடன் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார். அது மட்டுமின்றி பிரியாணி செய்வது எப்படி, தன்
மகன்கள் வளர்க்கும் நாய்கள் குறித்த கதையை எல்லாம், சம்பந்தமே இல்லாமல் பிரசாரத்தில் அவிழ்த்து விடுகிறார்.
இதனால் வேதனை அடைந்த கேநகூ ஒருங்கினைப்பாளார் வைகோ, விஜயகாந்த் பேசும் கூட்டங்களில், அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் சினிமாவில் நடித்தபோது ஒவ்வொரு ஷாட்டிலும் இயக்குனர்கள் கொடுக்கும் வசனத்தையே அவ்வபோது மறந்து விட்டு முழித்தவர் என்பதால், பிரச்சார மேடையில் கூட்டத்தைப் பார்த்து சில சமயங்களில் அவர் உணர்ச்சி வசப்பட்டு என்ன பேசுவது என்ற தெரியாததாலும், இனி வரும் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் விஜயகாந்த் வாயை மட்டும் அசைக்கவும், அவருக்காக பின்னணியில் இருந்து வைகோ தந்து அனல் பொறி பறக்கும் கிரேக்க வரலாற்றை பேச இருப்பதாகவும் தெரிகிறது.
இது குறித்து ஒரு கேநகூ தலைவர் கூறும்போது, கேப்டன் முதல்வர் ஆனால் எப்படியும் ஒரு திறமையான பிஏ தேவைப் படுவார், அதற்காக அண்ணன் வைகோ இப்போதே பயிற்சி எடுக்கிறார். இனிமேல் வைகோதான் கேப்டனுக்கு எல்லாமே. அதோடு கோவில்பட்டியில் போட்டியிடும் முடிவில் இருந்து வைகோ திடீரென பின்வாங்கினார். இதையடுத்து, அவரை சாத்துார் தொகுதியில் போட்டியிடு மாறு, விஜயகாந்த் அறிவுறுத்தினார். இதை வைகோ ஏற்கவில்லை. இதனால், வைகோ மீது விஜயகாந்த் கடும் அதிருப்தியில் உள்ளார். இதையறிந்த வைகோ, விஜயகாந்தை சமரசம் செய்வதற்காக இந்த உதவியை செய்ய முன்வந்துள்ளார் என்று செய்திகள் உலவுகின்றன என்று கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks