நியூஸ் ஏழரை (7&1/2) சானல் கருத்துக் கணிப்பில் கேப்டன் 4-ம் இடம்- வைகோ அதிர்ச்சி “அவர் டெபாசிட் வாங்க மாட்டார் என்று நினைத்தேனே”

622

சென்னை: இன்று காலையில், நியூஸ் 7 1/2 (நியூஸ் ஏழரை) தொலைக்காட்சி ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து கேநகூ ஒருங்கிணப்பாளர் வைகோ கூறியதாவது: இதில் உண்மையை சொல்லுகிறார்கள், அதனால் இந்த கருத்துக்கணிப்பு பொய்யானது. அது மட்டுமல்லாமல் இது திமுகவை வெற்றி பெற செய்ய வைக்கும் சதி திட்டம். ‘குடி’மக்களிடமும், டாஸ்மாக் வாடிக்கையாளர்களிடமும் கேட்டு பார்க்காமல் எடுத்த கருத்துக் கணிப்பு. அதை விட கொடுமை என்னவென்றால் உளுந்தூர் பேட்டையில் போட்டியிடும் கேப்டன் விஜயகாந்த் 4- வது இடத்திற்கு தள்ளப்படுவார் என கூறுகின்றனர். இது நம்பும் படியாக இல்லை. நான் கேப்டன் டெபாசிட் வாங்க மாட்டார் என்றுதான் நினைத்தேன். எனவே இது ஒரு போலி கருத்துக் கணிப்பு.

அதிமுக எங்களின் எதிரி தான் இருந்தாலும், அம்மாவை வெற்றி பெற வைப்பதுதான் என் நோக்கம், எனவே இந்த கருத்துக் கணிப்பு தவறானது என்று சொல்கிறேன். மக்கள் நல கூட்டணி தோல்வியை தழுவும் என்றும் கூறப்பட்டுள்ளது . இது பற்றி எனக்கு கவலை இல்லை, அது அனைவரும் அறிந்தது தான். இவ்வாறு வைகோ பேசினார்.

There are no comments yet