சென்னை: சட்டபேரவை தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், ஏற்கனவே திமுக, தேமுதிக, மக்கள் நலகூட்டணி, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டன. அதிமுகவை பொறுத்தவரை தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. பல புதிய அம்சங்களுடன் தனது தேர்தல் அறிக்கையை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இப்படிப்பட்ட சூழலில்தான் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் பல விஷயங்கள் குறித்து நமக்குத் தகவல் கிடைத்தன.
இந்த தேர்தல் அறிக்கையில் ஹை லைட்டாக, மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாவட்டந்தோறும் திமுகவினருக்கு மறுவாழ்வு இல்லங்கள் அமைத்து தர ஜெயலலிதா முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் வருமானம் இல்லாமல், மக்களை ஏமாற்றி பிழைப்பதை தவிர வேறு எந்த வேலையும் தெரியாமல் வறுமையில் வாடி, வருந்தி இருக்கும் கருணாநிதி குடும்பத்தினருக்கும், திமுகவினருக்கும் புனர்வாழ்வு கொடுக்க ‘திமுக மறுவாழ்வு மையங்கள்’ (DMK REHABILITATION CENTERS) அமைக்கப்படும் என்றும் தெரிகிறது. இதன் முதல் கட்டமாக சென்னை அண்ணா அறிவாலயம் அரசுடமையாக்கபட்டு அதில் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் இதுவரை எவ்வாறு தமிழ் நாட்டு மக்களை விஞ்ஞான முறையில் ஏமாற்றி வந்துள்ளனர் என்பது குறித்த கண்காட்சி கூடம் அமைக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
மேலும் தனது அடுத்த ஆட்சியில் அமைச்சர்களும், எம்எல்ஏ-க்களும், தலைமைக்கு தெரியாமல் லஞ்சம் வாங்குவதை கண்காணிக்க ஒரு சிறப்பு புலனாய்வுப் படையும், அடிமைகள் வாங்கும் லஞ்சத்தில் தலைமைக்கு கொடுக்கப்படும் பங்கை கணக்கு வைக்க புதிய ஆடிட்டர் ஜெனரலும் நியமிக்கப்படுவார்கள் என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks