சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உஉருவான படம் தெறி. தெறி படம் விஜய்க்கு மிகவும் பிடித்துப்போனதால் தெறி 2 படத்துக்கும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது. தெறி வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தெறி 2வில் அட்லியுடன் இணைந்துள்ளார் இளைய தளபதி. இந்த படத்தை சிவாஜி புரோடக்சன்ஸ் சார்பில் பிரபு தயாரிக்கவுள்ளார். படத்தில் கத்ரீனா கைஃப் மற்றும் தீபிகா படுகோனே விஜய்க்கு ஜோடி சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், தேறி-2 படத்தின் கதையின் ரெடி ஆகி விட்டதாக நமது சிரிப்பு நிருபருக்கு வந்த தகவலை அடுத்து, நமது புலனாய்வுப் படை அதிரடி ஆராய்ச்சி செய்ததில் பல சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்துள்ளன. அட்லிக்கு நெருக்கமான ஒரு பட்லி நமது கப்சா நிருபரிடம் கூறியதாவது: தெறி-2 படத்தின் கதைக்காக பர்மா பஜாரில் ஷாப்பிங் செய்துள்ளார் அட்லி. கடைக்காரரிடம் சத்ரியன்–2 படத்தின் சிடி இருக்கிறதா என்று கேட்டுள்ளாராம். கடைக்காரர் கோபமாக பார்க்க, உடனிருந்த அசிஸ்டெண்ட் டைரக்டர்கள், சார் அப்பல்லாம் இரண்டாம் பாகம் இல்லை என காதைக் கடிக்க, சுதாரித்துக் கொண்ட அட்லி, சரி, சிங்கம்-3 இருக்கிறதா கேட்டுள்ளார். படம் இன்னும் எடிட்டிங் ரூமில இருந்து வெளிய வரல.. வந்த உடனே தரேன். என்றுள்ளார். சரி வழக்கமா வாங்குற விஜயகாந்த், ரஜினி படங்களை வாங்கிச் செல்வோம் என கூறிய அட்லி, புலன் விசாரணை, ஊமை விழிகள், வல்லரசு, வாஞ்சிநாதன், அருணாச்சலம், படையப்பா சிடிக்களை வாங்கியுள்ளார். உதவியாளர்களும் தங்கள் பங்கிற்கு அஜித்தின் ஆஞ்சநேயா, காக்க காக்க சிடிகளை வாங்கி நுங்கம்பாக்கத்தி
ல் இருக்கும் பெயர் இல்லாத ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலும் ரூம் புக் செய்து இந்த படங்களையெல்லாம் பார்த்து கதை ரெடி ஆனதாகத் தெரிகிறது.

செண்டிமெண்ட் சீன்களுக்காக் அட்லியும் உதவியாளர்களும் தினமும் தெய்வமகள், வாணி ராணி சீரியல்களை பார்க்கின்றார்களாம். கொசுறு செய்தியாக பாலிவுட் பாம் கத்ரீனா கைஃப் மற்றும் தீபிகா படுகோனை வைத்தே தேறி-2ஐ விற்று சிவாஜி புரடக்சனுக்கு அட்லி அல்வா கொடுத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks