சென்னை : கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. நான் சொன்னதை செய்தேன். சொல்லாத பலவற்றையும் செய்தேன். அதனால், அதிமுக தேர்தல் அறிக்கையில் இவ்வளவு தான் என்று கருதிவிடாதீர்கள் இன்னும் இலவசம் நிறைய இருக்கிறது என்று பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா தெரிவித்தார். இதனால் மேலும் பல இலவசங்களுக்கு தமிழக மக்கள் தயாராகி வரும் நேரத்தில், ஜெயலலிதா எவ்வாறு இந்த திட்டங்களை நிறைவேற்றுவது என்றும் இப்போதே கணக்குப் போட்டு வருகிறார்.
இதன் முதல் கட்டமாக, கொஞ்சம் கடனில் தவிக்கும் நம் தமிழ்நாட்டை கடன் மிகை மாநிலமாக மாற்றவும், தொழில் வளர்ச்சியை பெருக்கவும் வீட்டுக்கு வீடு இட்லிக் கடை திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தின் படி, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் அவரவர் வீட்டிலேயே ஒரு இட்லிக் கடை வைக்க இலவச உரிமம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இது குறித்து, சென்னை ஆர் கே நகர் பிரசாரத்தில் ஜெயலலிதா கூறியதாவது: தமிழகத்தின் கடன் சுமை கடந்த 5 ஆண்டுகளில் 108% ஆக அதிகரித்துள்ளது. அதிமுக அரசு கடந்த முறை பதவியேற்கும் போது ஒரு லட்சத்து 1710 கோடியாக இருந்த தமிழகத்தின் கடன்சுமை இப்போது ரூ. 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடியாக அதிகரித்து விட்டது. அதாவது ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ.31,192 கடன்சுமை சுமத்தப்பட்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கியுள்ள ரூ.2.01 லட்சம் கோடி கடனையும் சேர்த்தால் தமிழக மக்கள் ஒவ்வொருவர் மீதான கடன்சுமை ரூ.60,766 ஆக உயர்ந்திருக்கிறது. எனவே இந்தக் கடன்களை ஒழிக்க ஒரே வழி மக்களை தொழிலதிபர்களாக மாற்றி சமுதாயத்தை உயர்த்த வேண்டும். இந்த வீட்டுக்கு வீடு இட்லிக் கடைத் திட்டத்தின்படி மக்கள் அனைவரும் முதலாளி ஆகிவிடுவார்கள். எனவே இங்கு தொழிலாளி, முதலாளி என்ற பேதம் இருக்காது, வறுமை ஒழியும்.
மேலும் விவசாயிகளின் ரூ. 40,000 கோடி மதிப்பிலான அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். இந்த சுமையை ஈடுகட்ட சாராய அதிபரும், வங்கிகளை ஏமாற்றி நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையாவிடம் கடன் வாங்கவும் முடிவு செய்துள்ளோம். அதன் மூலம், எல்லா இலவச் திட்டங்களையும் செவ்வனே நிறைவேற்றி முடிப்பேன் என்று சூளுரைத்தார்.
There are no comments yet
Or use one of these social networks