சென்னை: பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியாவில் மதங்களை முற்றிலும் ஒழித்து நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்த வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் அதை நோக்கிய பாதையில் பயணிக்கிறோம். சரியான திசையில் நாட்டை செலுத்துகிறோம். அதனால்தான் ஆங்காங்கே மாட்டிறைச்சியை தடை செய்தோம். எல்லோரும் இந்தி படியுங்கள், உங்களுக்கும், எங்களுக்கும் அது நல்லது.
நான் பிரதமராக பதவியேற்ற பிறகு கடந்த 19 மாதங்களில் 33 நாடுகளுக்கு வெளிநாட்டு பயணம் போய் இருக்கிறேன். மூன்றில் இரண்டு பங்கு உலகத் தலைவர்களை சந்தித்துள்ளேன். ஆனால் தமிழ் நாட்டுக்கு வரும்போது தான் எனக்கு பாஸ்போர்ட், விசா எதுவும் தேவையில்லை. இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நாளை பிரச்சாரத்தை முடித்து இந்தியா போக இருக்கிறேன், டெல்லியில் எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்று கூறினார். அதன் பிறகு கூடவே இருந்த தமிழ் இம்சை பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது என்று நினைவுபடுத்தியது தனிக்கதை.
There are no comments yet
Or use one of these social networks