துாத்துக்குடி: திருச்செந்துாரில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் ச.ம.க., தலைவர் நடிகர் சரத்குமாரிடமிருந்து ஒன்பது லட்சம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பிரசாரம் முடித்துவிட்டு திருச்செந்துாருக்கு தனது காரில்SARATHKUMAr திரும்பிக்கொண்டிருந்த சரத்குமார் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ஆயிரம், ஐநுாறு ரூபாய் தாள்கள் 9 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்துக் கூறிய சரத்குமார் நான் ஊர் ஊராகச் சென்று தீர்ப்பு சொல்லும் நாட்டாமை, சொம்பு இல்லாமல் என்னால் தீர்ப்பு சொல்ல முடியாது. எனவே அந்த பணம் ஒன்பது லட்சமும் நான் சொம்பு வாங்க வைத்திருந்த பணம். அதை அதிகாரிகள் உடனே எனக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என ஆவேசமாகக் கூறினார்.

There are no comments yet