சென்னை: அதிமுகவில் படையெடுக்கும் நடிகர் பட்டாளத்திற்கு போட்டியாக, ஏதாவது செய்யவேண்டும் என்று ஸ்டாலின் நினைத்து, விரித்த வலையில் இளைய தளபதி விஜய் வசமாக சிக்கினார் என கூறப்படுகிறது. அதிமுகவிற்கும், விஜய்க்கும் உள்ள முன் பகையையும், விஜய்யின் அப்பா சந்திரசேகரின் பழைய திமுக பாசத்தையும் காட்டி விஜய் மற்றும் குடும்பத்தினருடன் ஸ்டாலின்-சபரீசன் கோஷ்டி பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சு வார்த்தையில், திமுக ஆட்சிக்கு வந்தால் சந்திரசேகருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி, விஜய்க்கு துணை முதல்வர் பதவி மற்றும், அனைத்து விஜய் படங்களுக்கும் வரி விலக்கு என்று ஆசை காட்டியதாகவும், அந்த வலையில் விழுந்த விஜய் “ஒன்னும் பிரச்சினை இல்லை, நான் இப்பவே என் ரசிகர் மன்ற தலைவருக்கு சொல்லிடறேன்” என்று கூறியதாகவும் தெரிகிறது.sdalin_vjai

இதை கேள்விப்பட்ட அதிமுகவினர், தங்கள் பங்கிற்கு பேஸ்புக், டிவிட்டரில் விஜய் தி.மு.க., விற்கு சொம்பு தூக்க ஆரம்பித்து விட்டார் என்று விஜய்யை வசைபாடி வறுத்து எடுத்தனர்.

எப்படி என் வீட்டுல ரகசியமா சொன்னது வெளிய தெரிஞ்சி போச்சி, இந்த ஸ்டாலின் கோஷ்டிதான் விசயத்தை லீக் பண்ணியிருக்கும், அய்யய்யோ 60-வது படத்துக்கு ஆப்பு வந்துடுமோ என பயந்த விஜய், தனது காட்ஃபாதர் ஆன சந்திரசேகரிடம் அறிவுரை கேட்டுள்ளார். அந்த உரையாடலை நமது புலனாய்வு நிருபர் ரகசியமாக மனதில் பதிவு செய்து உங்களுக்கு இங்கே வழங்குகிறார்.

விஜய்: நைனா.. எனக்கு ஆப்பு வந்துடுச்சு நைனா..

சந்திரசேகர்: ஏலே, நீ தானடா மத்தவங்களுக்கு ஆப்பு வைப்ப உனக்கு யாரு ஆப்பு வச்சது..

விஜய்: அம்மா..

சந்திரசேகர்: அவ ரூம்ல நல்லா தூங்குறா.. ஏண்டா உளர்ற..

விஜய்: நம்ம அம்மா.. இல்ல நைனா.. தமிழ்நாட்டோட அம்மா..

சந்திரசேகர்: அம்மாவா.. தெளிவா சொல்லுடா.. என்ன ஜெயில்ல ஜட்டியோட உட்கார வச்சிடாதடா..

விஜய்: நான் தி.மு.க.,விற்கு ஓட்டுப் போட ரசிகர்கள தூண்டிவிட்ட செய்தி லீக் ஆகிடுச்சு..

சந்திரசேகர்: பீப் பாடலே லீக் ஆகுது.. நீ பேசினா லீக் ஆகாதா..

விஜய்: இப்போ அதுக்குத்தான் என்ன பண்ணலாம்..

சந்திரசேகர்: யோசிக்க தெரிஞ்சா நான் உன்னைய வச்சி நல்ல படம் பண்ண மாட்டேனா.. என்கிட்ட ஐடியா கேக்குறியே..

விஜய்: ஏதாவது சொல்லி காப்பாத்து நைனா..

சந்திரசேகர்: ஒண்ணு பண்ணு.. எல்லா கட்சிகளுக்கும் ஆதரவுன்னு சொல்லிடு.. உன் ரசிகர்கள எல்லா கட்சிக்கும் ஓட்டுப் போட சொல்லிடு.. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உன் படத்துக்கு பிரச்னை பண்ண மாட்டாங்க.. எப்படி என் ஐடியா..

விஜய்: சூப்பர் நைனா.. கலக்கிட்ட..

இதை அடுத்து , உடனே மீடியாக்களை அழைத்த விஜய் எல்லா கட்சிக்களுக்கு எனது ஆதரவு. யார் வேணாலும் .. ஜெயிச்சிட்டு போங்க.. ஆனா என் படத்த மட்டும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று கூறி ‘தல’ தெறிக்க ஓடினர்.

There are no comments yet