சென்னை: தற்போது திமுக பிரசாரக் கூட்டங்களில் ‘மலைக்கள்ளன்’ பாடல் பாடி ஸ்டாலின் அசத்திய ஸ்டாலினின் பாடலுக்கு பின்னால் பெரிய கதை உள்ளதா கட்சியினர் கூறினார். “சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்..” என்ற ஸ்டாலினின் பாடலைக் கேட்ட ஒரு தொண்டர் ஸ்டாலின் எப்போதுமே இப்படிதான் தற்பெருமை பேசுவார் என்று கிண்டலடித்தார்.
தேர்தல் தோல்விக்கு பிறகு, பழைய கலைஞர் படங்களிலில் உள்ள பாட்டுக்களை, மகன் தயநிதியோடு சேர்ந்து ரீமிக்ஸ் செய்து பொழுதைக் கழிக்கவும் முடிவு செய்துள்ள ஸ்டாலின், திண்டுக்கல் லியோனியை சந்தித்து அவரது பட்டி மன்றங்களில் பாடவும் சான்ஸ் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் லியோனியின் ஆலோசனைப்படி, சிறுவர்களை கவர பால்வாடி பாடல்கள், கான்வெண்ட் படிக்கும் போது கற்ற நர்சரி ரைம்ஸ், கர கர குரலில் குழந்தை கவிஞர் அழ வள்ளியப்பா பாடல்கள், கிராமத்து மக்களை கவர தாலாட்டுப் பாடல், கும்மிப்பாடல், நாற்று நடும் பாடல், ஏற்றம் இறைக்கும் பாடல், ஒப்பாரி, என அனைத்து வகையான பாடல் முறைகளையும் கற்று வருகிறார். இதல் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து ஆட்சி அமைக்காவிட்டாலும், அட் லீஸ்ட் தனது மகன் உதயநிதி படங்களில் ‘கொத்து பரோட்டா முட்டை போடட்டா’ டைப்பில் பாடல்கள் பாடியும், சூப்பர் சிங்கரில் பாடியும் காலம் தள்ள ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
There are no comments yet
Or use one of these social networks