உளுந்தூர்பேட்டை: தான் போட்டியிடும் தொகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று, விஜயகாந்த் சிறப்பு வழிபாடு நடத்தினார். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அங்கேயே முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று காலை உளுந்தூர்பேட்டையை அடுத்த உளுந்தாண்டார்கோவிலில் உள்ள, மாஷபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்ற விஜயகாந்தும் மனைவி பிரேமலதாவும் அங்கு சிறப்பு வழிபாடு செய்தனர். பின் இருவரும், பரிக்கலில் உள்ள, பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமிகோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். பரிக்கல் கோவிலில் வழிபாடு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த் கூறியதாவது: தேர்தல் தேதி நெருங்க நெருங்க கொஞ்சம் டர்ராதான் இருக்கு. நேத்து நான் மட்டன் பிரியாணி சாப்பிட்டேன், ஆனா அதுல ஆட்டைக் காணோம், அது போல் தான் இந்த அரசு இலவசங்களை தந்து மக்களை ஏமாற்றுகிறது. இனிமே இந்த செம்மறி ஆட்டு மக்களை நம்பி பிரயோஜனம் இல்லை, சும்மா என்னைய ஜோக்கர் மாதிரி பாக்க வர்ற கூட்டம் இது, எனக்கு ஓட்டுப் போடாது. வைகோவை நம்பி மோசம் போய் விட்டேன். நான் யாருக்கும் ஓட்டுக்கு பணம் கொடுக்கிற நிலைமையில் இல்லை, யாரவது எனக்கு பணம் கொடுத்தா வங்கிக்கிட்டு கட்சிய அவங்ககிட்ட கொடுத்துடலாம்னு இருக்கேன். எனக்கு ஆண்டவன் தான் இனி துணை. ஆண்டவன் கூடதான் கூட்டணி. அதன் கோயில் கோயிலாக குடும்பத்தோட சுத்தறேன். தேர்தல் முடிஞ்ச பின்னாடி சிங்கப்பூருக்கு போய் அங்க சாமியறா ஆகப் போறேன் என்று கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks