தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், வீட்டுக்கு ஒருவருக்கு கல்லூரிக்குச் செல்லாமலேயே டாக்டர் பட்டம் – உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து “டாக்டர்” கலைஞர் சூளுரை

497

சென்னை: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், வீட்டுக்கு ஒருவருக்கு கல்லூரிக்குச் செல்லாமலேயே, படிக்காமலேயே டாக்டர் பட்டம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது இன்றைய அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் ஆகியவற்றில், மாணவ, மாணவியர் சேருவதற்கான நுழைவுத்தேர்வை, அனைத்து மாநிலங்களிலும் நடத்தியே ஆக வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இது அநியாயம், நுழைவுத்தேர்வை நடத்தினால், தகுதியான, தரமான டாக்டர்கள் உருவாகி விடுவார்கள்.  என்னைப்போல அரசியல்வாதிகளும் நாலு காசு பார்த்து பிழைக்க முடியாது.

அது மட்டுமன்றி நான் அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வி பயின்று, எந்தவொரு நுழைவு தேர்வும் எழுதாமல் பொறியியல் / மருத்துவம் படிப்பை முடித்து வெளி வரும் மாணவர்களில் மொத்தம் 5-10% மட்டுமே வேலைக்கு தயாராக இருக்கிறார்கள். மாணவர்கள் சீர் இல்லா படிப்பை படித்துவிட்டு, வேலை கிடைக்காமல், கல்வி கடனை கட்ட முடியாமல் இருப்பதைப் பார்த்து, கான்வென்டில் படித்த என் பிள்ளைகளும் பேரன்களும் எள்ளி நகையாடுவதைப் பார்த்து என் மனம் பூரிப்படைகிறது. தி.மு.க., ஆட்சிக்கு வருமானால், தமிழகத்தில் அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வோம். தமிழக மாணவர்கள், கல்லூரிக்குச் செல்லாமலேயே மருத்துவம், பொறியியல் மற்றும் பல் மருத்துவ பட்டங்கள் பெற, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுவோம். நானும் என் கட்சியினரும் நிறைய டாக்டர் பட்டங்கள் வாங்கியிருக்கிறோம். எனவே இதை அமல் செய்வது எங்களுக்கு ஒரு பெரிய விஷயம் அல்ல.என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.

There are no comments yet