சென்னை: விஷால், ஸ்ரீதிவ்யா, ஆர்.கே.சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மருது’. முத்தையா இயக்கி இருக்கும் இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடித்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் இவ்வேளையில், படம் மே.20ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

‘மருது’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள். அதில் விஷால் பேசியது: திருட்டு வி.சி.டி விஷயத்தைப் பற்றி நான் ஒருவன் தான் மறுபடியும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். 24 படத்தோட விசிடி வந்து சக்கை போடு போடுகிறது. அதே போல் மருது படத்தையும் திருட்டு வி.சி.டியில் ரிலீஸ் செய்யலாம் என இருக்கிறேன். இந்தப் படத்துக்கான சீடி, ராப்பர் எல்லாம் ரெடியாகிட்டு இருக்கு. தேர்தல் முடிஞ்ச பிறகு அம்மாவோட பதவி ஏற்பு விழாவிற்கு அப்புறம், எனது திருட்டு வி.சி.டி வெளியாகும். நானும் என் நண்பர்களோட களத்தில் இறங்கப்போறேன். இந்தமுறை நான் விடமாட்டேன். மத்தவங்க திருட்டு வி.சி.டி வெளியிடறதுக்கு முன்னாலே நானே என்னோட படத்தை திருட்டு வி.சி.டியில் வெளியிடுவேன். ஏன்னா நான் வித்தியாசமானவன்.Vishal

திருட்டு வி.சி.டி.யை ஊக்குவிக்க நான் ஒருவன் தான் இன்றுவரை இந்தத் திரையுலகத்தில் தனி ஆளாக போராடிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய படத்திற்காக மட்டுமல்ல, எல்லா நடிகர்களுக்காகவும் தான் பேசுகிறேன். ’24’ படம் ரிலீஸான உடனே திருட்டு டிவிடி வந்துவிட்டது. இதில் திருட்டு வி.சி.டி. தயாரிப்பாளர்கள் கொஞ்சம் தாமதம் செய்துவிட்டனர். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே திருட்டு வி.சி.டியை வெளியிட வேண்டும் அதில் தான் ஒரு கிக் இருக்கிறது.

ஆனால் ‘மருது’க்கு நான் அந்த மாதிரி விடப்போவதில்லை. கண்டிப்பாக திருட்டு வி.சி.டி. வெளியிடுவார்கள், அவர்களுக்கு முன்பே நான் திருட்டு வி.சி.டியிலும், இண்டர்நெட்டிலும் படத்தை வெளியிட்டு விடுவேன். இதன் மூலம் திருட்டு வி.சி.டிகார்களுக்கு பாடம் கற்பிப்பேன்.” என்று பேசினார் விஷால்.

There are no comments yet