அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் முழுவது கனத்த பணமழை – தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

456

சென்னை: தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு தமிழ் நாட்டின் சாபக் கேடான அதிமுகவும், திமுகவும் மாநிலம் முழுவதும் மையம் கொண்டு ஓட்டுப் பிச்சை வேண்டு, மக்களைப் பிச்சைக்கார்களாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், ஆங்காங்கே தொகுதியைப் பொறுத்து மிதமான அல்லது கனத்த பணமழை பெய்யக் கூடும் என தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த பணமழையின் தாக்கம் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை கடுமையாக இருக்குமெனவும் மற்ற நேரங்களில் “விட்டு விட்டு” பணமழை பெய்யலாம் என்றும் தேர்தல் கமிஷன் இயக்குனர் லக்கானி தெரிவித்தார். மேலும் இதன் தாக்கம் 15 தேதி இரவு வரை நீடிக்கும் எனவும் பொதுமக்கள் தங்கள் வீட்டு கதவை திறந்தே வைக்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும் தமிழகத்தை இந்த இரண்டு கட்சிகளின் பெரு நாசத்திலிருந்து காப்பாற்ற வாக்காளர்கள் நல்லவர்களுடன் இணைந்து பயணிக்குமாறு நாட்டுநலனில் அக்கறையுள்ள நடுநிலையாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

There are no comments yet