தோல்வி எதிரொலி – ம.ந.கூ வை கலைத்து, தலை முழுகினார் வைகோ. அடுத்த புராஜெக்ட்டுக்கு ரெடி

2108

சென்னை: தேர்தலில் தோல்வி என அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஒருமித்துக் கூறுவதாலும், கேப்டனின் உளறல் பிரச்சாரத்தினாலும், தனது கே.ந.கூ விற்கு வரும் தேர்தலில் மரண அடி நிச்சயம் என்பதை உணர்ந்த வைகோ இன்று ம.ந.கூ, மற்றும் கே.ந.கூ வை கலைத்து உத்திரவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து இன்று தாயகம் வட்டங்களில் கூறப்படுவதாவது: வைகோ மிகவும் நம்பிக்கை வைத்து, எப்படியாவது தான் முதல்வராகி விடலாம் என ம.ந.கூ வை ஒருங்கிணைத்தார். ஆனால் உண்டியல் தூக்கும் கம்யூனிஸ்டுகளையும், சாதிக் கட்சி திருமாவையும் வைத்துக் கொண்டு அது நடக்காது. தான் ஒரு டுடோரியல் கல்லூரிக்கு தான் முதல்வராக்க முடியும் என்பதை உணர்ந்த பின், வேறு யாரைக் கெடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது விஜயகாந்த் வந்து சிக்கினார். தவளை தன் வாயால் கெடும் என்பதைப் போல், கூட்டங்களில் பேசத் தெரியாமல் பேசி, ‘ஒரு ஹீரோ காமடியன் ஆனார்’ என்பதைப் போல் விஜயகாந்த் ஒரு செல்லாக்காசு என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர். இதற்கிடையில், வேறு எங்கும் போக்குக் கிடைக்காமல் வாசனின் பண்ணையார் கட்சியும் வைகோவின் தற்கொலை கூட்டணியில் வந்து விழுந்தது.09-1460204669-vsan456-600

எங்கே, தேர்தலில் போட்டியிட்டு, நமது உண்மையான ‘சக்தி’ மக்களுக்கும், மற்ற அரசியல் கட்சிகள், தொண்டர்களுக்கு தெரிந்து விட்டால், தனது அடுத்தடுத்த ‘ஏமாற்று’ பேச்சுக்களுக்கும், திட்டங்களுக்கும் வரவேற்பு இருக்காது என்பதை உணர்ந்த நமது கிரேக்க வீரர் சாதி ஒழிப்பு வீரனாகி தேர்தல் போட்டியில் இருந்து ஜகா வாங்கினார். இப்போதைய தமிழக அரசியலில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரே அரசியல் வியாதி வைகோதான், ஏனென்றால் அவரது அனைத்து திட்டங்களையும் அச்சுப் பிசகாமல் நடத்தி தனது எஜமானர்களை குஷிப்படுத்தி இருக்கிறார் அல்லவா என்று மூச்சு விடாமல் பேசி முடித்தார்.

அவர் அருகில் இருந்த மற்றொரு தொண்டர் கூறும்போது, ம.ந.கூ வையும், கே.ந.கூ வையும் தலை முழுகிவிட்டு, தனது முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் போல வைகோ அடுத்த புராஜக்டுக்கு தயாராகி விட்டார். அவரது அடுத்த கிளையன்ட் அம்மாவா, கலைஞரா என்று தெரியவில்லை. அதுவரை நாம் பொறுத்திருப்போம் என்று கிண்டலடித்தார்.

There are no comments yet