வாசிங்டன், அமெரிக்கா: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் 100% ஓட்டுப்போடவேண்டும் எனவும் விளம்பரங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய நடிகர் சூர்யா. தன்னால் வாக்களிக்க தமிழகம் வர மனமில்லை என்று கூறியுள்ளதாக தெரிகிறது.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ’24’. இந்த படத்தை வெளியீட்டிற்கு முன்பே பார்க்கவேண்டும் என்ற ஆசையில் அமெரிக்காவில் நடைபெற இருந்த இப்படத்தின் ப்ரீமியர் காட்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்றார் நடிகர் சூர்யா. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தல் வாக்களிக்க சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சூர்யா சென்னை திரும்பவில்லை. அதற்கு பதிலாக ஒரு அறிக்கை ஒன்றை அமெரிக்காவில் இருந்து வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நான் ஒரு நடிகன், தேர்தல் கமிஷன் கொடுத்த பணத்திற்கு நடித்தேன், நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்கவே நான் ரெம்ப யோசித்தவன். இப்போது நான் அமெரிக்காவில் இருப்பதால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளேன்.actor surya

போனால் போகிறதென்று தேர்தல் கமிஷன் விளம்பரங்களில் நடித்த பாவத்திற்கு என் நடிப்பில் வெளிவந்த 24 படத்தில் தூக்கி எறியப்பட்ட டைம் மெஷின் வாட்ச்சை தேடிக் கண்டுபிடித்து தமிழகம் வந்தவுடன் மீண்டும் மே 16 தேதியில் அனைவுருக்கும் முன்பே வாக்களிக்கவும் திட்டமிட்டுள்ளேன். அதோடு மே 19ல் தேர்தல் முடிவை பார்த்துவிட்டு எந்தக் கட்சி ஜெயிக்கப்போகிறது என்பதை துல்லியமாக அறிந்துக் கொண்ட பின் தனது வாக்கை அக்கட்சிக்கு சாதகமாக போடலாம் எனவும் முடிவு செய்துள்ளேன் என்று நடிகர் சூர்யா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

There are no comments yet