வாக்குப் பதிவுக்கு பிந்தைய கணிப்பில் வெற்றி – இப்போதே கட்டை பஞ்சாயத்தை ஆயத்தம் செய்ய உடன் பிறப்புக்கு கலைஞர் கடிதம்

389

சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்ற தேர்தலின் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கணிப்பில் 3 நிறுவனங்கள் திமுக ஆட்சி அமைக்கும் என்று கூறியதை அடுத்து, மகிழ்ச்சியில் திளைத்து 93-வயதில் ஆறாவது முறையாக முதல்வர் பதவியை அடையும் கலைஞர் இன்று உடன் பிறப்புகளுக்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதியுள்ளார், அதில் கூறியிருப்பதாவது: உடலையும், உயிரையும் கொடுத்து, என் குடும்பம் ஆசியாவிலேயே மிகப் பெரிய செல்வந்தராக உதவி செய்த உடன்பிறப்பே, நீயும் நானும், ஓருயிர் ஈருடல், எனக்காக குடல் வெந்து, குருதி கொடுத்து என்னை ஆறாம் முறை அரியணை ஏற்றி இருக்கிறாய். உனக்கு நன்றிக் கடனாகக் கொடுக்க இந்த ஏழையிடம் என்ன இருக்கிறது, நன்றி என்ற சொல்லைத் தவிர.

ஆனால், என்னை நன்றி மறந்தவன் என்று நினைத்து விடாதே, நானும் என் குடும்பத்தினரும் இழந்ததைப் பிடிக்க நீ உதவியது போல், நீயும் இழந்ததை மீட்க என்னால் ஆன உதவியை செய்வேன். ஆகவே, நீயும், உன் குடும்பத்தினரும், முன்புபோல், கட்டைப் பஞ்சாயத்து செய்து வருமானம் ஈட்டkaruna stalinவும், நில ஆக்கிரமிப்பு செய்து சொத்து சேர்க்கவும் எனது ஆதரவு அன்றுபோல் இன்றும், என்றும் உண்டு. நான் முதல்வர் பதவி ஏற்கும் வரை நீ காத்திருக்கத் தேவையில்லை. சமூக சேவையை இப்போதே தொடங்கலாம். என்றும் எனக்கும் என் குடும்பத்
திற்கும் விசுவாசமான உடன்பிறப்பாக இருக்க உன்னை வணங்கி வேண்டுகிறேன் என்று கடிதத்தில் கலைஞர் கூறியுள்ளார்.

There are no comments yet