சென்னை: அண்ணா நகரில் நடிகர் விஷால் வாக்களித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கு நன்றி. சிறப்பாகச் செயல்பட்டு கோடிக்கணக்கான பணத்தைக் கைப்பற்றியுள்ளனர். என் படங்களுக்குக் கூட இவ்வளவு வசூல் இருக்காது. இந்தப் பணம் மீண்டும் மக்களுக்கே பயன்பட வேண்டும். vishal_2855515fஅதற்கு ஒரே வழி என்னைக் கதாநாயகனாக வைத்து நன்கு அல்லது ஐந்து ஹாலிவுட் படம் எடுப்பது மட்டுமே, அதற்கு ஹீரோயினாக டாப் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டனை போடலாம். அவரது தேதி கிடைக்கவில்லை என்றால் நம்ம ஊர் ஐஸ்வர்யா அல்லது தீபிகா படுகோனை கேட்கலாம். நாம் செலுத்தும் வரிப் பணம் தவறாகப் பயன்படுத்தப்படுவது (வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது) வருத்தமாக உள்ளது. பணத்தை உபயோகமாக செலவழிக்க வேண்டுமானால் மக்கள் என் படங்களை தியேட்டரில் போய் பார்க்கவேண்டும். அனால் எல்லோரும் என் படத்தை இண்டர்நெட்டில் பார்த்து விடுகிறார்கள். அவர்களுக்கு நான் மீண்டும் மீண்டும் தோல்விப் படங்களில் நடித்து சரியான பாடம் கற்பிப்பேன் என்றார் நடிகர் விஷால்.

There are no comments yet